டோனி, சுனில் கவாஸ்கரின் சாதனைகளை முறியடித்தார் கோஹ்லி

ICC World Test Championship - 2021

255
BCCI

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஒருசில சாதனைகளை முறியடித்தார்.

இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 7,500 ஓட்ட ங்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடம் யாருக்கு?

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று சௌதாம்ப்டனில் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நேற்றைய முதல் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, போதியளவு வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது 58.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அணித் தலைவர் விராத் கோஹ்லி 40 ஓட்டங்களுடனும், ரஹானே 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சில சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இந்தப் போட்டி ஆரம்பமாகும் முன்னரே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அதிக போட்டிகளில் (61) வழிநடத்திய தலைவர்கள் பட்டியலில், எம்.எஸ் டோனியை பின்னுக்கு தள்ளி கோஹ்லி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 7,500 ஓட்டங்கள் மைல்கல்லை கோஹ்லி எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 7,500 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த மைல்கல்லை விராத் கோஹ்லியும், சுனில் கவாஸ்கரும் 154ஆவது இன்னிங்ஸில் எட்டியுள்ளனர். அதேபோல, நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 144ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய முதலிடத்தில் உள்ளார்.

இதில் விரேந்திர சேவாக் (144 இன்னிங்ஸ்) மற்றும் ராகுல் டிராவிட் (148 இன்னிங்ஸ்) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கான பரிசு என்ன?

அதுமாத்திரமின்றி, சர்வதேச அளவில் 7,500 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர்கள் வரிசையில் 9ஆவது இடத்தை விராத் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.  

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆவது இடத்தில் களமிறங்கி 6,000 ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி, இரண்டாவது வீரராக இடம்பிடித்தார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (13,492) உள்ளார்.

அதேபோல, டெஸ்டில் 4ஆவது இடத்தில் களமிறங்கி 6,000 ஓட்டங்கள் எடுத்த தலைவர்கள் பட்டியலிலும் விராட் கோஹ்லி, இரண்டாவது வீரராக இடம்பிடித்தார். அவுஸ்திரேலியாவின் நட்சத்திர ஜாம்பவான் ஆலன் பார்டர் (6,111) முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<