ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

ICC Test Championship 2021

220

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறயைாக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாத்தை நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா  மற்றும் நியூசிலாந்து அணிகள் சௌதெம்டனில் வைத்து எதிர்வரும் 18ம் திகதி மோதவுள்ளன. இந்தப்போட்டிக்கான இரண்டு அணிகளும் இங்கிலாந்து சென்றுள்ளன. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கான பரிசு என்ன?

இதில் இந்திய அணி பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், நியூசிலாந்து அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-0 என தொடரை கைப்பற்றியது. இதில், 22 வருடங்களுக்கு பின்னர், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரொன்றை நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.

அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்த குழாத்தில், முதன்மை சுழல் பந்துவீச்சாளராக அஜாஸ் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி இரட்டை சதம் கடந்த டெவோன் கொன்வே 15 பேர்கொண்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார். கொன்வே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

அதேநேரம், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து உபாதை காரணமாக நீக்கப்பட்ட அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் மீண்டும் அணியை வழிநடத்தவுள்ளார். அதேநேரம், உபாதைக்கு முங்கொடுத்துள்ள பிஜே வெட்லிங் மற்றும் கேன் வில்லியம்சஸன் ஆகியோர் போட்டிக்கு முன்னர், தாயாராகிவிடுவார்கள் என பயிற்றுவிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர்களுடன் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் நீண்டகாலமாக இடம்பிடித்துவந்த கொலின் டி கிரெண்டோம் உபாதையிலிருந்து குணமாகியுள்ளதால், அவரும் இறுதி 15 பேர்கொண்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இவர்களுடன் வழமையாக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவந்த டொம் லேத்தம், ரொஸ் டெய்லர், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட் மற்றும் கெயல் ஜெமிஸன் ஆகிய முன்னணி வீரர்கள் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), டொம் பிளெண்டல், ட்ரெண்ட் பொல்ட், டெவோன் கொன்வே, கொலின் டி கிரெண்டோம், மெட் ஹென்ரி, கெயல் ஜெமிஸன், டொம் லேத்தம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சௌதி, ரொஸ் டெய்லர், நெயில் வெங்கர், பிஜே வெட்லிங், வில் யங்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<