ஐ.சி.சியின் மே மாதத்துக்கான சிறந்த வீரராக முஷ்பிகுர் ரஹீம் தெரிவு

ICC Men's Player of the Month Award

191

ஐ.சி.சியின் மே மாதத்துக்கான சிறந்த வீரராக பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீமும், சிறந்த வீராங்கனையாக ஸ்கொட்லாந்தின் கெத்ரின் ப்றைஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இதன்படி, கடந்த மே மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை .சி.சி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது

இதில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் பங்களாதேஷpன் முஷ்பிகுர் ரஹீம் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர்.

குமார் சங்கக்காரவுக்கு ஐ.சி.சியின் ‘Hall OF Fame’ கௌரவம்

இதன்படி, மே மாதத்துக்கான சிறந்த வீரராக பங்களாதேஷின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவாகியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் 125 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆத்துடன் ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றவும் முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன், 3 போட்டிகளிலும் விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் மொத்தமாக 237 ஓட்டங்களை எடுத்து தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதன்படி, முதல் ஐந்து மாதங்களிலும் உப கண்டத்தைச் சேர்ந்தவர்களே .சி.சியின் மாதத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச்சென்றுள்ளனர்.

இதில் இந்தியாவின் ரிஷhப் பன்ட் (ஜனவரி), ரவிச்சந்திரன் அஸ்வின் (பெப்ரவரி), புவ்னேஸ்வர் குமார் (மார்ச்), பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் (ஏப்ரல்) ஆகியோரைத் தொடர்ந்து தற்போது முஷ்பிகுர் ரஹீம் இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளார்

இதனிடையே, மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது ஸ்கொட்லாந்தின் சகலதுறை வீராங்கனை கெத்ரின் ப்றைஸுக்கு கிடைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான 4 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கெத்ரின் ப்றைஸ் 96 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

அதி சிறந்த வீராங்கனை விருதுக்கான பட்டியலில் கெபி லூயிஸ் (அயர்லாந்து), லீ போல் (அயர்லாந்து) ஆகியோரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<