இலகு வெற்றியுடன் யூரோ 2020ஐ ஆரம்பித்த இத்தாலி

UEFA EURO 2020

238
UEFA EURO

துருக்கியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய இத்தாலி அணி, யூரோ 2020 கால்பந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து தொடரான யூரோ கிண்ணத் தொடர், இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களின் உள்வாங்களுடன் ஆரம்பமானது. 

தொடருக்கான ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஒலிம்பிகோ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இத்தாலி வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும் எந்தவித கோல்களும் பெறப்படவில்லை. 

தென் கொரியாவுடன் 10 வீரர்களுடன் போராடிய இலங்கை கால்பந்து அணி

எனினும் இரண்டாம் பாதியில் 53ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் பெரார்டி உள்ளனுப்பிய பந்து துருக்கி பின்கள வீரர் டெமெராலின் உடம்பில் பட்டு கோலுக்குள் செல்ல, ஓன் கோலின் மூலம் இத்தாலி முன்னிலை பெற்றது. 

மீண்டும், 66ஆவது நிமிடத்தில் சீரோ இம்மோபிலே மூலம் இத்தாலி அணி அடுத்த கோலையும் பெற்றது. தொடர்ந்து 79ஆவது நிமிடத்தில் துருக்கி கோல் காப்பாளரின் பிழையான பந்துப் பரிமாற்றத்தினால் இத்தாலி அணிக்கு லொரென்சோ இன்சைன் மூன்றவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

முழு நேரம்: இத்தாலி 3 – 0 துருக்கி 

கோல் பெற்றவர்கள்  

  • இத்தாலி – மெரி டெமெரால் 53’(OG), சீரோ இம்மோபிலே 66’, லொரென்சோ இன்சைன் 79’  

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<