கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தால் கடந்த ஆண்டு சர்வதேச விளையாட்டுத் துறை முற்றிலுமாக முடங்கியிருந்தாலும், இந்த ஆண்டு உலகில் பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றதுடன், இவ்வருடத்தின் எஞ்சியுள்ள மாதங்களிலும் இன்னும் முக்கிய பல விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யூரோ 2020 கால்பந்துப் போட்டி, FA கிண்ண இறுதிப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு விழா மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழா, ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், IPL தொடர், பாகிஸ்தான் சுப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், T20 உலகக் கிண்ணம், அங்குரார்ப்பண தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டிகள், பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் சுற்றுப் போட்டி, கோபா கிண்ண கால்பந்து தொடர், டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடர், ரக்பி லீக் உலகக் கிண்ணம் என்பன இந்த ஆண்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, அவ்வாறு இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள ஒவ்வொரு விளையாட்டு நிகழ்ச்சிகளும் என்ன என்பது பற்றிய இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
கிரிக்கெட்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல்தடவையாக ரசிர்கள் முன்னிலையில் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த இங்கிலாந்து நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பல கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி
இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்ற கிரிக்கெட் வசந்த காலம் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது
நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் இலங்கைக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூன் 29 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜூலை முதலாம் திகதியும், மூன்றாவது போட்டி ஜூலை 4 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் மூன்று நாட்களுக்குப் பிறகு ஜூலை 8, 10 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும், நியூசிலாந்திற்கும் இடையே ஜூன் 18 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் போல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Video – இலங்கையில் மீண்டும் கலைகட்டப் போகும் LPL திருவிழா..!
அத்துடன், அங்குரார்ப்பண தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டி ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
மறுபுறத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதேபோல, இந்தியாவின் இரண்டாம் நிலை அணியொன்று ஜுலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் என்பன நடைபெறவுள்ளன.
அத்துடன், கொரோனா வைரஸினால் ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகள் அபுதாபியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றன.
IPL ஐ நடத்த இங்கிலாந்து கவுண்டி அணிகள் ஆர்வம்
அதேபோல, ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐ.சி.சி இன் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 18 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 15ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவில் பெரும் பேரழிவாக இருக்கும் கொரோனா வைரஸ் இன்னும் மோசமான நிலையில் இருந்தால், T20 உலகக் கிண்ணத்தை வேரொரு நாட்டில் நடத்துவதற்கு ஐ.சி.சி அவதானம் செலுத்தியுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இது நவம்பர் 23 ஆம் திகதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கால்பந்து
கால்பந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ள எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த 15ஆம் திகதி லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் செல்ஸி கழகத்தை வீழ்த்தி லெஸ்டர் சிட்டி கழகம் முதல் தடவையாக எப்.ஏ கிண்ண சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இதனிடையே, பெண்களுக்கான இறுதிப்போட்டி 22ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற்றது.
இம்மாத இறுதியில் தென் கொரியா பயணமாகும் இலங்கை கால்பந்து அணி
இதேநேரம், கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தின் மன்செஸ்டர் சிட்டி – செல்சி அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 29ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இங்கிலாந்து அரசு, கொரோனா அதிகரிப்பு காரணமாக துருக்கியை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியை போர்த்துக்கல் நாட்டில் உள்ள போர்டோ நகருக்கு மாற்றப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சங்கம் அறிவித்தது.
இந்தப் போட்டியை காண இரு கழகங்களையும் சேர்ந்த தலா 6 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற இந்த மோதலில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி இரண்டாவது முறையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.
11 நகரங்களில் 51 போட்டிகள் கொண்ட யூரோ கிண்ண கால்பந்து தொடர் இந்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து விலகும் வடகொரியா
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கோபா அமெரிக்க கிண்ண கால்ப்நது தொடர் அர்ஜென்டிடீனா மற்றும் கொலம்பியாவில் ஜூன் 13 முதல் ஜூலை 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், கொலம்பியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அர்ஜென்டீனாவில் மாத்திரம் கோபா அமெரிக்க கிண்ணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஆபிரிக்க கிண்ண கால்பந்து தொடர் கெமரூனில் நடைபெறவுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, 2022 பீபா உலகக் கிணண் கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டிகளும் தற்போது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிரான்ஸ்ட்லாம் அந்தஸ்த்து பெற்ற உலகின் முன்னணி டென்னிஸ் தொடரனான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடர் ஜூன் 30ஆம் திகதி முதல் ஜூன் 13ஆம் திகதி வரை பரிஸில் நடைபெறவுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர், ஜூன் 28ஆம் திகதி லண்டனில் தொடங்குகிறது. போட்டிகள் ஜூலை 11 வரை நடைபெறவுள்ளது.
விளையாட்டுத்துறையை மேம்படுத்த மூன்று சங்கங்களுக்கு நிதி உதவி
வருடத்தின் இறுதி கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரானா அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதனிடையே, டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில், இப்போட்டியை நடத்தவுள்ள ஜப்பான் நாட்டின் மக்களிடையே கொரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜப்பானில் சுமார் 60 சதவீத மக்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளமை அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கை இரத்து செய்யக் கோரி ஜப்பானியர்கள் எதிர்ப்பு
ஒலிம்பிக் போட்டியை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இருப்பினும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்காமல், உள்ளூர் பார்வையாளர்களைக் கொண்டு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் ஜப்பான் அரசு தீவிரமாக உள்ளது.
மெய்வல்லுனர்
13 சுற்றுகளைக் கொண்ட டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடர் மே மாதம் 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது.
திடீர் உபாதையினால் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிடும் டில்ஷி
அதேபோல, உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ளது.
சைக்கிளோட்டம்
உலகின் முன்னணி சைக்கிளோட்டப் போட்டியான பிரெஞ்சு சைக்கிளோட்டம் ஜூன் 26ஆம் திகதி முதல் ஜூலை 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மரதன்
உலகின் முன்னணி வீரர்கள் பங்குபற்றுகின்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டி ஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ரக்பி
ரக்பி விளையாட்டின் முதன்மையான போட்டிகளில் ஒன்றான ரக்பி லீக் போட்டித் தொடர் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 27 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
அதேபோல, 2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<