இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: கேன் வில்லியம்சன் விலகல்

207

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். 

இதனையடுத்து நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பதில் தலைவராக டொம் லதம் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நாளை ஆரம்பமாகவுள்ளது. கடந்த சில தினங்களாக இதற்கான பயிற்சியில் நியூசிலாந்து அணி ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் அந்த அணியின் சுழல் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னெருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சாண்ட்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டு ட்ரென்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இடது முழங்கையில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வந்த நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து வீரர் இடைநீக்கம்

எனவே, அவருக்குப் பதிலாக அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டொம் லதம் தலைவராகச் செயல்படவுள்ளார். 

இதேநேரம், கேன் வில்லியம்சனுக்கு காயத்தின் தன்மை பெரிதாக இருக்கும் பட்சத்தில் அவரால் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, காயம் காரணமாக விலகிய கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியில் வில் யங் இடம்பெறவுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<