சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள T20 மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்படவுள்ள அணிகளை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றது.
“தேர்வுக்குழுவின் இளம் வீரர்கள் கொள்கை வீணடையவில்லை” – பிரமோதய
எட்டு ஆண்டுகள் கொண்ட 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் சம்பியன்ஸ் லீக் உள்ளடங்கலாக ICC இன் எட்டு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அடங்குகின்ற ஒருநாள் உலகக் கிண்ணங்களில் விளையாடும் அணிகள் 10 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, T20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணிகள் 16 இல் இருந்து 20 இற்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
அணிகளை அதிகரிக்கின்ற தீர்மானம் நேற்று (01) இணையவழி வாயிலாக நடைபெற்ற ICC இன் நிர்வாக சபை கூட்டத்தின் போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
ICC 2027ஆம் ஆண்டு ஒழுங்கு செய்துள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 54 போட்டிகள் நடாத்தப்படவுள்ளதோடு, அதில் 14 அணிகளை இணைக்க 2003ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை ஒத்தவிதத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய 2027ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவில் இருந்தும் சுபர் சிக்ஸ் சுற்றுக்காக 3 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பின்னர் 4 அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட தெரிவு செய்யப்படவுள்ளன.
தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அஸ்கர் ஆப்கான்
அதேநேரம் T20 உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்படும் 20 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு சுபர் 8 சுற்று நடைபெறவிருப்பதோடு, அதிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என்பவற்றிற்காக தெரிவு செய்யப்படவிருக்கின்றன. அதேவேளை, 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக (2024, 2026, 2028, 2030) நான்கு T20 உலகக் கிண்ணத் தொடர்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணியுடன் இணையும் ரங்கன ஹேரத்!
இதேநேரம், இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் ஒழுங்கு செய்யப்பட்டு அது அங்கே நடைபெறுவதில் கொவிட்-19 வைரஸ் காரணமாக சிக்கல்கள் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த உலகக் கிண்ணத் தொடரினை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றுவது தொடர்பிலான இறுதி அறிவிப்பினை தெரிவிப்பதற்கு ICC இம்மாதம் 28ஆம் திகதி வரையில் காலக்கேடு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு மேலதிகமாக ICC தமது நிர்வாக சபைக் கூட்டத்தின் போது டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டிகள் 2025, 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் என்பதனையும் உறுதி செய்திருக்கின்றது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…