தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அஸ்கர் ஆப்கான்

Afghanistan Cricket

204

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகையுமான கிரிக்கெட் போட்டிகளினதும், தலைவர் பதவியிலிருந்து அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கர் ஆப்கான், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஹஸமதுல்லாஹ் ஷஹிடி , டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தேர்வு குறித்து டில்ஷான், சனத் அதிருப்தி

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ள போதும், T20I போட்டிகளுக்கான தலைவர், விரைவில் நியமிக்கப்படுவார் எனவும், அதுவரை ரஷீட் கான் T20I போட்டிகளுக்கான தலைவராக செயற்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தலைவர் பதவியிலிருந்து, அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டுள்ளார். குறித்த விசாரணையின்படி, ஆப்கான் தலைவராக மேற்கொண்ட சில முடிவுகள் காரணமாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளோம்என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. குறித்த இந்தப்போட்டியின் தோல்விக்கு பின்னர், கருத்து வெளியிட்ட அஸ்கர் ஆப்கான், தோல்விக்கான காரணமாக வீச கிடைக்க தாமதமாகியமையை குறிப்பிட்டார். குறித்த இந்த போட்டி தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து, அஸ்கர் ஆப்கான் கடந்த 2019ம் ஆண்டு திடீரென நீக்கப்பட்டார். குறிப்பாக உலகக்கிண்ணம் நெருங்கும் சந்தர்ப்பத்தில், ஆப்கான் நீக்கப்பட்டதுடன், குலாபுதீன் நயீப் உலகக் கிண்ணத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், ஆப்கானிஸ்தான் அணி உலககக் கிண்ணத்தின் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாமல் நாடு திரும்பியிருந்தது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…