பங்களாதேஷ் அணியுடன் இணையும் ரங்கன ஹேரத்!

Bangladesh Cricket

229

இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி, இதற்கு முன்னர் செயற்பட்டுவந்தார். இந்தநிலையில், தனக்கும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் நியமனம் கிடைத்துள்ளதாக ரங்கன ஹேரத் எமது இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

CPL இல் விளையாட சகிப் அல் ஹசனுக்கு அனுமதி மறுப்பு?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, எதிர்வரும் மாதங்களில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சை பலப்படுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில், இடதுகை சுழல் பந்துவீச்சாளராக  அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாதனையை தன்னகத்தே வைத்துள்ள ரங்கன ஹேரத் கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்திருந்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் பயிற்சிவிப்பாளர்களுக்கான கல்வியை மேம்படுத்தியிருந்த ரங்கன ஹேரத், கடந்த வருடம் தேசிய கிரிக்கெட் பயிற்றுவிப்பு குழாத்தின், சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அத்துடன், இலங்கையில் நடைபெற்ற LPL தொடரில் கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளாக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், ரங்கன ஹேரத்தின் ஒப்பந்தக்காலம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<