பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான நெய்மர், இன்றைய தினம் அவ்வணியுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.
Video – சம்பியன்ஸ் கிண்ணத்தில் புதிய சாதனையை படைத்த TUCHEL! | FOOTBALL ULAGAM
அந்த ஒப்பந்தத்தின்படி, 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை பிரேசில் நாட்டை சேர்ந்த முன்கள வீரரான நெய்மர், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான நெய்மர், கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா கழகத்திடம் இருந்து உலக சாதனை தொகையான 200 மில்லியன் பௌண்ட்களுக்கு பிரான்ஸ் நாட்டு கழகமான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து பிரான்ஸ் கழகத்திற்காக 112 போட்டிகளை விளையாடியுள்ள இவர், 85 கோல்களையும் 51 கோலுக்கான உதவிகளையும் (Assists) வழங்கியுள்ளார்.
மாற்றங்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்து அணி
நெய்மர் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்கு வந்ததிலிருந்து இக்கழகம், 3 தடவைகள் லீக் 1 கிண்ணங்கள் உட்பட 9 கிண்ணங்களை வென்றிருக்கிறது.
தனது முந்தைய ஒப்பந்தத்தின் இறுதி வருடத்தில் இருக்கும் நெய்மர், தற்போது புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை அடுத்து அவர் மேலும் 4 வருடங்களுக்கு பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி நெய்மர் வருடத்திற்கு 30 மில்லியன் பௌண்ட்கள் வரை உழைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<