இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கு கொவிட்-19 தொற்று

Sri Lanka women's Cricket

207

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் 10 வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, ஏனைய 10 வீராங்கனைகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீராங்கனைகள் வெல்லம்பிட்டியில் உள்ள சிறப்பு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகிய வீராங்கனை தொடர்பான செய்திகள் வெளியாகாத நிலையில், அவரை உடனடியாக கல்கிசையில் உள்ள ஒரு சிறப்பு கொவிட்-19 சிகிச்சை மையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, அடுத்துவரும் தொடர்களுக்கான முன் ஆயத்தமாக பயிற்சிகளை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<