இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் அட்டவணை வெளியீடு

315

இம்மாத இறுதியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான தொடரில் சகிப், முஷ்தபிசூர் விளையாடுவதில் சிக்கல்?

இம்மாதம் 16ஆம் திகதி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.  

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய ஒருநாள் சுபர் லீக்கில் அடங்குகின்ற இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் டாக்காவில் அமைந்துள்ள ஷேர்-ஈ-பங்களா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

பகலிரவு மோதல்களாக நடைபெறவுள்ள இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 25ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 28ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன. 

இதேநேரம், இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி தமது வீரர்களுக்கு இடையே விளையாடும் பயிற்சி ஒருநாள் போட்டி ஒன்றும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இதேவேளை, குறித்த ஒருநாள் தொடரினை நிறைவு செய்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியினர் எதிர்வரும் 29ஆம் திகதி தாயகம் திரும்பவிருக்கின்றனர். 

ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

இந்த ஒருநாள் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் பலரிற்கு வாய்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

ஒருநாள் தொடர் அட்டவணை 

மே 21 – பயிற்சி ஒருநாள் போட்டி – டாக்கா

மே 23 – முதல் ஒருநாள் போட்டி – டாக்கா 

மே 25 – இரண்டாவது ஒருநாள் போட்டி – டாக்கா 

மே 28 – மூன்றாவது ஒருநாள் போட்டி – டாக்கா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…