கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீலங்களின் பெரும் சமர்

Big Matches 2021

264

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸை புனித தோமையர் கல்லூரிகளுக்கு இடையிலான 142வது நீலங்களின் பெரும் சமர் போட்டித்தொடர் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டள்ளது. 

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமர் எதிர்வரும் மாதம் 6, 7 மற்றும் 8ம் திகதிகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அணி வீரர்கள் நால்வருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால், போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்திய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பட் கம்மின்ஸ்

கல்லூரிகள் இரண்டும் இணைந்து நடத்தும் போட்டித் தொடரின், ஒருநாள் போட்டி இம்முறை T20 போட்டியாக எதிர்வரும் 10ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த போட்டியும் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட்டில், பழமை வாய்ந்த பெரும் சமரான, நீலங்களின் பெரும் சமர் தீவிரமடைந்துள்ள கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், நிலமை சீறடையும் நிலையில், மீண்டும் அட்டவணைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வரலாற்றில் முதல் தடவையாக நீலங்களின் பெரும் சமர் கொழும்புக்கு வெளியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு அமையவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

றோயல் மற்றும் தோமையர் கல்லூரிகளுக்கு இடையிலான பெரும் சமரானது உலகின், பழமை வாய்ந்த வருடாந்த கிரிக்கெட் தொடர்களில் இரண்டாவது தொடராக உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் புனித பேதுரு கல்லூரி மற்றும் அடிலெய்ட் ப்ரின்ஸ் எல்ப்ரட் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டித்தொடர் அமைந்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர், நீலங்களின் பெரும் சமருக்கு, ஒருவருடத்துக்கு முன்னர் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<