கொழும்பு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார்

278

சுகததாச அரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியின் நிறைவில், பலம் மிக்க கொழும்பு கால்பந்து கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுபர் லீக் கால்பந்து தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.  

ஏற்கனவே, இடம்பெற்ற இந்த தொடரின் தமது முதல் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் நியு யங்ஸ் கால்பந்து கழகத்தை வீழ்த்தியிருந்தது. எனினும், புளூ ஸ்டார் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகத்திடம் தோல்வி கண்டிருந்தது.  

சீ ஹோக்ஸ் அணிக்கு முதல் வெற்றி: ரட்னம் – அப் கண்ட்ரி மோதல் சமநிலையில்

இந்நிலையில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் ஆறாவது நிமிடத்தில் பசால் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தை இளம் வீரர்  ஷெனால் சந்தேஷ்,  மற்றொரு இளம் வீரரான இஹ்சானுக்கு பரிமாற்றம் செய்ய, அவர் புளூ ஸ்டார் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

அதன் பின்னர் முதல் பாதியில் கொழும்பு அணி வீரர்கள் கோலுக்கான சில வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், எந்தவித கோல்களும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது. 

இரண்டாம் பாதியிலும் கொழும்பு வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த போதும், அவர்கள் எடுத்த கோலுக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. 

மறுமுனையில், தடுப்பு வீரர்கள் எவரும் இல்லாத நிலையில் புளூ ஸ்டார் வீரர்களுக்கு கிடைத்த கோலுக்கான இரண்டு வாய்ப்புக்களையும் அவர்கள் வீணடிக்க, போட்டி நிறைவில் இஹ்சானின் ஒரே கோலினால் புளூ ஸ்டார் அணி 1-0 என வெற்றி பெற்று, சுபர் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 1 –  கொழும்பு கா.க 

கோல்  பெற்றவர்கள் 

புளூ ஸ்டார் வி.க – மொஹமட் இஹ்சான் 6’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<