இலங்கையின் முதலாவது தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக்கின் முதல் நாள் போட்டிகளில் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம் என்பன வெற்றிகளைப் பெற்றுள்ளன.
கொழும்பு கா.க எதிர் நியு யங்ஸ் கா.க
சுபர் லீக் தொடரின் முதல் போட்டியாக இடம்பெற்ற இந்த மோதலின் 15ஆவது நிமிடத்தில் கொழும்பு வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது சர்வான் உள்ளனுப்பிய பந்தை ஷமோத் டில்ஷான் ஹெடர் செய்து தொடரின் முதல் கோலைப் பெற்றார்.
முதல் பாதி: கொழும்பு கா.க 1 – 0 நியு யங்ஸ் கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 8 நிமிடங்களில் கொழும்பு அணிக்காக கன்னிப் போட்டியில் விளையாடிய முஷாகிர் ராசிக் எதிரணி கோல் காப்பாளர் தனுஷ்க மூலம் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டியை சர்வான் கோலாக்கினார்.
களை கட்டவிருக்கும் இலங்கையின் சுபர் லீக் கால்பந்து திருவிழா
தொடர்ந்து 80ஆவது நிமிடத்தில் மொமாஸ் யாபோ எதிரணியின் கோல் எல்லைக்குள் இருந்து கோலுக்குள் செலுத்திய பந்து தனுஷ்கவின் உடம்பில் பட்டு கோலுக்குள் சென்றது.
கொழும்பு அணிக்கு மாற்று வீரராக வந்த சிரேஷ்ட வீரர் ரௌமி மொஹிடீன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால் 86ஆவது நிமிடத்தில் ஷமோத் டில்ஷான் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
மறுமுனையில் நியு யங்ஸ் வீரர்கள் தமக்கு கிடைத்த கோலுக்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் வீணடிக்க, போட்டி முடிவில் கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என இலகுவாக வெற்றி பெற்று தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம்: கொழும்பு கா.க 4 – 0 நியு யங்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- கொழும்பு கா.க – ஷமோத் டில்ஷான் 15’ & 86’, சர்வான் ஜோஹர் (P) 53’, மொமாஸ் யாபோ 80’
புளூ ஸ்டார் வி.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க
மின்னொளியின் கீழ் இடம்பெற்ற அடுத்த மோதலின் களுத்தறை மாவட்டத்தில் உள்ள இந்த முன்னணி அணிகள் இரண்டும் பலப்பரீட்சை நடாத்தின.
ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் புளூ ஸ்டார் வீரர் சுபுன் தனன்ஜய தனது அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொடுக்க, ரஹுமான் அதனை கோலாக்கினார்.
தொடர்ந்து 10 ஆவது நிமிடத்தில் கோலுக்கு அண்மையில் இருந்து டிலக்ஷன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை இஸ்மயில் அபுமெரி இலகுவாக கோலாக்கினார்.
கால்பந்து நடுவர்களுக்கான தொடர்பாடல் உபகரணங்கள் கையளிப்பு
அடுத்த 25 நிமிடங்களில் புளூ ஸ்டார் அணித் தலைவர் லஹிரு தாரக எதிரணி வீரரை தமது கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் இழுத்து வீழ்த்த, ரெட் ஸ்டார்ஸ் அணிக்கு அடுத்த பெனால்டி வாய்ப்பும் கிடைத்தது. அதே நேரம், லஹிரு தாரக இரண்டாவது சிவப்பு அட்டையையும் பெற்று மைதானத்தில் இருந்து சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார். இதன்போது ரஹ்மாக் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.
பின்னர் புளூ ஸ்டார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது மத்திய களத்தில் இருந்து பின்கள வீரர் ஜெர்ரி பந்தை கோலுக்குள் செலுத்தி, தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
முதல் பாதி: புளூ ஸ்டார் வி.க 1 – 3 ரெட் ஸ்டார்ஸ் கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் அர்ஷாட் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை செனால் சந்தேஷ் கோலுக்கு அண்மையில் இருந்து இலகுவாக கோலாக்கினார்.
பின்னர், புளூ ஸ்டார் வீரர் தரிந்து எரங்கவும் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட, அவ்வணி 9 வீரர்களுடன் எஞ்சிய நேரத்தை விளையாடியது.
எனினும், 75 ஆவது நிமிடத்தில் ரஹ்மான் அடுத்த கோலையும் பெற்று, சுபர் லீக் தொடரின் முதலாவது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
எனவே, போட்டி நிறைவில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் ரெட் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 2 – 4 ரெட் ஸ்டார்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
- புளூ ஸ்டார் வி.க – ரஹுமான் 3′ (P), 36′ (P), 75′, இஸ்மயில் அபுமெரி 10‘
- ரெட் ஸ்டார்ஸ் கா.க – A. ஜெர்ரி 41′, ஷெனால் சந்தேஷ் 56‘
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<