2000 ஆண்டுகளின் தலைசிறந்த ஒருநாள் வீரராக முத்தையா முரளிதரன் தேர்வு

350
muralitharann
Image Courtesy : Getty Image

விஸ்டன் இதழினால் 2000ஆம் ஆண்டுகளின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டுள்ளார்.

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் இதழ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கௌரவித்துள்ளது.

>> Video – “Tom Moody இன் வழிகாட்டலுடன் பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றம்” – Muralitharan…!

இதில் இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் தலைசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு முதன்முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் தலைசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

1990ஆம் ஆண்களில் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரரா திகழும் இந்திய நட்சத்திர ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரிடப்பட்டுள்ளார்.

>> Video – இளம் வீரர்களுடன் BANGLADESH ஐ சந்திக்கும் இலங்கை அணி..!| Sports RoundUp – Epi 157

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய உலக சாதனை படைத்தவரும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் விளங்கும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து ஜாம்பவான்

முத்தைய முரளிதரன் 2000ஆம் ஆண்டுகளின் தலைசிறந்த ஒருநாள் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் தவைரான விராத் கோஹ்லி 2010களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 2008இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோஹ்லி, 2010, 2019இல் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 சதங்கள் உட்பட 11,125 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதுதவிர கோஹ்லி, 2011இல் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்

முன்னதாக கடந்த வருடம் ஐசிசி இனால் அறிவிக்கப்பட்ட தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான விருதையும், தசாப்தத்தின் சிறந்த ஆண் வீரருக்கான விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

>> அவுஸ்திரேலியாவின் மல்க்ரெவ் கழக தலைவரானார் டில்ஷான்

அதேபோல, ஐசிசி இன் தசாப்தத்தின் டெஸ்ட் அணித் தலைவராகவும் கோஹ்லி பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விஸ்டன் இதழினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த ஆண்டின் தலைசிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டொம் சிப்லி, செக் கிராவ்லி, டெரன் ஸ்டீவன்ஸ், மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர், பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<