விரல் உபாதைக்கு ஆளாகிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான (2021) இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் (IPL) இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> இலங்கையை வந்தடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, IPL தொடருக்கான தமது முதல் போட்டியில் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியிருந்தது.
இந்தப் போட்டியின் போது கிறிஸ் கெயிலின் பிடியெடுப்பினை கைப்பற்ற முயற்சித்த பென் ஸ்டோக்ஸிற்கு சுட்டு விரலில் உபாதை ஏற்பட்டிருந்ததோடு, தற்போது இந்த உபாதை அவருக்கு IPL தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஒன்றினையும் உருவாக்கியிருக்கின்றது.
>> இலங்கையை வந்தடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி
அதேநேரம், பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அவர்களது உதிரி வெளிநாட்டு வீரர்களாக இருக்கும் டேவிட் மில்லர் அல்லது லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரில் ஒருவரினை முதல் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<