கால்பந்து நடுவர்களுக்கான தொடர்பாடல் உபகரணங்கள் கையளிப்பு

296

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இலங்கையின் கால்பந்து விளையாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் நடுவர்களுக்கான தொடர்பாடல் உபகரணங்களை நேற்றைய தினம் (12) கையளித்திருக்கின்றது. 

Video – MBAPPE ஐ கட்டுப்படுத்த தடுமாறும் எதிரணிகள் !FOOTBALL ULAGAM

அதன்படி, இவ்வாறு கையளிக்கப்பட்டிருக்கும் தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள், இலங்கை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் நடைபெறவிருக்கும் தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் தொடரில் உபயோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

கடந்த காலங்களில் கால்பந்து நடுவர்கள் தமது தொடர்பாடல்களை மேற்கொள்வதில் இருந்த சிக்கல்களைக் கருத்திற் கொண்டு வழங்கப்பட்டிருக்கும் இந்த தொடர்பாடல் உபகரணத் தொகுதிகள், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கால்பந்து நடுவர் அமைப்பின் தலைவர் AGC. தேசப்பிரிய மற்றும் பிபா நடுவர் புத்திக்க டயஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

பொலிஸ் அணியை இலகுவாக வென்றது திரிபுவான் இராணுவ அணி

அதேநேரம், இந்த உபகரணக் கையளிப்பு நிகழ்வில் இலங்கை கால்பந்து சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மருத்துவக்குழுத் தலைவர் மனில் பெர்னாந்து ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், உள்ளூர் நடுவர்களின் தொடர்பாடல் விருத்தி கருதி இன்னும் நான்கு மேலதிக தொடர்பாடல் தொகுதிகளையும் இலங்கை கால்பந்து சம்மேளனம் தருவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<