அரையிறுதிக்கு தெரிவான திசர பெரேராவின் இராணுவப்படை அணி

183

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் பிரதான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நான்கும் இன்று (7) நிறைவுக்கு வந்தன. 

இலகு வெற்றி பெற்ற திசரவின் இராணுவப்படை அணி

இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளின் முடிவுகளை நோக்கும் போது NCC, திசர பெரேரா தலைமையிலான இலங்கை இராணுவப்படை, றாகம மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகங்கள் ஆகியவை வெற்றி பெற்று தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருக்கின்றன. 

மறுமுனையில் இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது NCC அணி சார்பில் சதம் விளாசியிருந்த காமில் மிஷார 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம், NCC அணிக்காக விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரரான அஞ்சலோ பெரேரா சதத்தினை ஆறு ஓட்டங்களால் தவற விட்டிருந்தமை (94) குறிப்பிடத்தக்கது. 

அஞ்சலோ பெரேரா தவிர ஏனைய இலங்கை அணி வீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரம தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்காக அரைச்சதம் (64) பெற்றிருந்ததோடு, சந்துன் வீரக்கொடி பதுரெலிய கிரிக்கெட் கழகம் சார்பில் (70) அரைச்சதம் விளாசியமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் பந்துவீச்சினை நோக்கும் போது திலகரட்ன டில்ஷானின் சகோதரரான திலகரட்ன சம்பத் பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்காக 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது இன்றைய நாளில் பதிவான சிறந்த பந்துவீச்சுப்பிரதியாக மாறியது. 

NCC எதிர் கடற்படை வி.க.

கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

NCC – 337/9 (50) காமில் மிஷார 107, அஞ்சலோ பெரேரா 94, கவீன் பண்டார 46, பூர்ணா சாருக்க 4/47

கடற்படை வி.க. – 170 (46) ஜொஹானே டி சில்வா 44, சாமிக்க கருணாரட்ன 2/23

முடிவு – NCC அணி 167 ஓட்டங்களால் வெற்றி 

இராணுவப்படை வி.க. எதிர் SSC

சரவணமுத்து மைதானம், கொழும்பு

இராணுவப்படை வி.க. – 198 (48.2) துஷான் விமுக்தி 55*, ப்ரபாத் ஜயசூரிய 3/32

SSC – 181 (47.1) ஹிமேஷ் ராமநாயக்க 54, சுமின்த லக்ஷான் 3/30, அசேல குணரட்ன 3/46, சீக்குகே பிரசன்ன 2/38

முடிவு – இராணுவப்படை வி.க. 17 ஓட்டங்களால் வெற்றி 

தமிழ் யூனியன் கி.க. எதிர் றாகம கி.க.

மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க 

தமிழ் யூனியன் கி.க. – 255/9 (50) யொஹான் மெண்டிஸ் 75, சதீர சமரவிக்ரம 64, பினுர பெர்னாந்து 3/47

றாகம கி.க. – 256/4 (46) ஜனித் லியனகே 91, உதார ஜயசுந்தர 86*, இசுரு உதான 2/37

முடிவு – றாகம கி.க. 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

சோனகர் வி.க. எதிர் பதுரெலிய கி.க.

டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

சோனகர் வி.க. – 154 (41.3) ஜீவன் மெண்டிஸ் 38, மொஹமட் சமாஸ் 31, திலகரட்ன சம்பத் 4/26

பதுரெலிய கி.க. – 157/3 (25.5) சந்துன் வீரக்கொடி 70, சஜித்ர சேரசிங்க 3/57

முடிவு – பதுரெலிய கி.க. 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…