மும்பை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19

235
Espncricinfo

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கௌட் மற்றும் விக்கெட் காப்பு ஆலோசகர் கிரன் மோர், கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மும்மை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பு, துடுப்பாட்ட வீரரான கிரன் மோர் தற்போது, மும்பை இந்தியன்ஸ் குழாத்திலிருந்து வெளியேறி, தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரினை வெற்றிகரமாக மாற்றுமா சென்னை சுபர் கிங்ஸ்?

கிரன் மோர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளமை தொடர்பில் அறிக்கையொன்றை மும்மை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

“கொவிட்-19 தொற்றின் அறிகுறி எதுவுமில்லாமல், கிரன் மோர் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே, இந்திய கிரிக்கெட் சபையின் வழிமுறைகளின் கீழ், கிரன் மோர் வைத்திய அதிகாரிகள் மூலம் கண்கானிக்கப்பட்டு வருகின்றார். கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, எமது ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரன் மோர் கடந்த சில நாட்களாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பல உறுப்பினர்களுடன் தொடர்புப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய தினத்தின் (06) பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன், குழாத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முடிவுக்காக அனைவரும் காத்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் தற்போது கொவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்றது. முதலில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அக்ஷர் பட்டேல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், பின்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்துத் படிக்கல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானார்.

ஐ.பி.எல்.  தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் வைத்து மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க