அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிர்வாக தேர்தல்கள் வரையில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களை நிர்வகிப்பதற்கான ஐந்து பேர் அடங்கிய கிரிக்கெட் குழு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐவரடங்கிய குழுவை நியமிக்க உத்தரவு
பேராசியர் அர்ஜூண டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஏஷ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உஜித்த விக்ரமசிங்க மற்றும் அமல் எதிரிசூரிய ஆகியோர் உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.
கடந்த மாதம் இலங்கையின் சட்டமா அதிபர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததனால் புதிய நிர்வாகம் ஒன்று தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் வரை, நிர்வாகக்குழு ஒன்றினை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்த பணிப்புரைக்கு அமைவாகவே புதிய நிர்வாகக்குழு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது.
>> பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யத் தயாராகும் முரளிதரன்
அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாக விடயங்களை தற்போது நியமனம் செய்யப்பட்டிருக்கும் குழுவே முகாமைத்துவம் செய்யவிருக்கின்றது.
மறுமுனையில், இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகசபைத் தேர்தல்களுக்கான திகதி மே மாதம் 20 என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<