இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் சுய தனிமைப்படுத்தலில்!

ROAD SAFETY WORLD T20 SERIES 2020

258

இந்தியாவில் அண்மையில் நிறைவுக்கு வந்த வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் பங்கேற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவராக கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.   

சச்சின், யூசுப் பதானைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கும் கொவிட்-19 தொற்று

இதில் கடந்த சனிக்கிழமை சச்சின் டெண்டுல்கருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்திய லெஜண்ட்ஸ் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும், சும்பரமணியம் பத்ரிநாத்திற்கும் இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இறுதியாக இந்திய லெஜண்ட்ஸ் அணியில் விளையாடிய இர்பான் பதானுக்கும் கோவிட் 19 தொற்று இருப்பது கடந்த திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது.  

எனவே, இந்திய லெஜண்ட்ஸ் அணியில் தற்போதுவரை நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கும் தொற்று உறுதியாகலாம் எனவும் கூறப்படுகிறது

இதனால், வீதிப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு வீரர்களும் PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய லெஜண்ட்ஸ் அணியின் இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி!

இதுஇவ்வாறிருக்க, இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி வீரர்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை வரை தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பிறகு அனைத்து வீரர்களையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே, வீதிப் பாதுகாப்பு T20 தொடரில் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த திலகரட்ன டில்ஷான், கௌஷல்ய வீரரத்ன மற்றும் சிந்தக்க ஜயசிங்க ஆகியோர் அவுஸ்திரேலியாவிலுள்ள தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் முகாமையாளர் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

அத்துடன், தற்போதுவரை இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் வீரர்கள் எவருக்கும் கொரோனா தொற்றோ, அதற்கான அறிகுறிகளோ உள்ளமை கண்டறியப்பட்டிருக்கவில்லை என இலங்கை லெஜண்ட்ஸ் அணி முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இலங்கை அணி உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பங்குபற்றலுடன்ல் தற்போது நடைபெற்று வருகின்ற பங்கபந்து சர்வதேச கபடி தொடரிலும் கோவிட் 19வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு கோவிட் 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<