இரண்டாவது வெற்றியை சுவைத்த சீ ஹோக்ஸ், ரெட் ஸ்டார் அணிகள்

Super League - Pre-Season 2021

267

சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் புளூ ஈகல்ஸ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட சீ ஹோக்ஸ் அணியும், ரட்னம் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில்  வீழ்த்திய ரெட் ஸ்டார்ஸ் அணியும் தொடரில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தன. 

கொழும்பு FC யை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; டிபெண்டர்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

சுகததாச அரங்கில் செவ்வாய்க்கிழமை (16) முதல் ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் வீரர்கள் எதிரணியின் மத்திய களத்தில் மேற்கொண்ட தொடர்ச்சியான பந்துப் பரிமாற்றங்களின்  பின்னர் தனுஷ்க மதுசங்க வழங்கிய பந்தை ஹஸ்மீர் கோலாக்கினார்.  

மீண்டும் போட்டியின் 9ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் அணியின் பின்களத்தில் இருந்து கவுண்டர் அட்டக் மூலம் கொண்டு வரப்பட்ட பந்தை இறுதியில் ஹஸ்மீர் கோலாக்கி, தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். 

அதன் பின்னர் முதல் பாதி முழுவதும் சீ ஹோக்ஸ் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 

முதல் பாதி: சீ ஹோக்ஸ் கா.க 2 – 0 புளூ ஈகல்ஸ் கா.க  

இரண்டாம் பாதியில் தமது வேகத்தை அதிகரித்த புளூ ஈகல்ஸ் வீரர்கள், கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் பயனாக போட்டியின் 53ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஜீவன்த பெர்னாண்டோ ஹெடர் செய்து முதல் கோலைப் பெற்றார். 

எஞ்சிய நிமிடங்களில் இரண்டு அணிகளும் மேலதிக கோல்களைப் பெறாத நிலையில் போட்டி முடிவில் சீ ஹோக்ஸ் வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். புளூ ஈகல்ஸ் வீரர்களுக்கு இது தொடரில் மூன்றாவது தோல்வியாகும். 

Video – PSG இன் போட்டிக்கு மத்தியில் அரங்கேறிய அசம்பாவிதம்! | FOOTBALL ULAGAM

புளூ ஈகல்ஸ் வீரர்கள் இந்த முன் பருவப் போட்டிகளில் தமது நான்கு போட்டிகளையும் நிறைவு செய்துள்ளனர். சீ ஹோக்ஸ் அணிக்கு இன்னும் இரு போட்டி மீதமுள்ளது.

முழு நேரம்: சீ ஹோக்ஸ் கா.க 2 – 1 புளூ ஈகல்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள் 

  • சீ ஹோக்ஸ் கா.க –   மொஹமட் ஹஸ்மீர் 3’ & 9’
  • புளூ ஈகல்ஸ் கா.க –  ஜீவன்த பெர்னாண்டோ 53’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

புளூ ஈகல்ஸ் கா.க – நெத்ம மல்ஷான் 20’, ஜீவன்த பெர்னாண்டோ 53’, ஷதுரங்க பெர்னாண்டோ 39’  

 ரட்னம் வி.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க   

மின்னொளியின்கீழ் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து அணித் தலைவர் ஏக்பான் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் சான்தன், ரட்னம் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

சிவப்பு அட்டையினை வழங்குவதற்கு மறந்த கால்பந்து நடுவர்

அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் சுபுன் தனன்ஜய ரெட் ஸ்டார்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

முதல் பாதி: ரட்னம் வி.க  1 – 1 ரெட் ஸ்டார்ஸ் கா.க      

இரண்டாம் பாதியில் ரட்னம் அணியின் மத்திய களத்தில் இருந்து பந்துப் பரிமாற்றம் செய்வதில் பல தவறுகள் இடம்பெற்றன. இதனால், அவர்களுக்கான பல கோல் வாய்ப்புக்கள் வீணாகின. 

எனினும், ரெட் ஸ்டார்ஸ் வீரர் ரட்னம் அணியின் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஹ்மால் கோலாக்கி ரெட் ஸ்டார்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். 

எனவே, ஆட்ட நிறைவில் ரெட் ஸ்டார்ஸ் அணி தமது இரண்டாவது வெற்றியுடன் சுபர் லீக் முன் பருவத்தை நிறைவு செய்துகொண்டது.   

முழு நேரம்: ரட்னம் வி.க  1 – 2 ரெட் ஸ்டார்ஸ் கா.க     

கோல் பெற்றவர்கள்    

  • ரட்னம் வி.க –  ரஜிகுமார் சான்தன் 11’
  • ரெட் ஸ்டார்ஸ் கா.க – சுபுன் தனன்ஜய 31’ M.ரஹ்மான் (P) 

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<