Home Tamil ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

288
Sri Lanka tour of West Indies 2021

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அதோடு, இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 3-0 எனக் கைப்பற்றி, இலங்கை வீரர்களை இந்த ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்திருக்கின்றனர். 

>> மே.தீவுகளிடம் ஒருநாள் தொடரையும் இழந்த இலங்கை அணி

மறுமுனையில், இலங்கை அணி இந்த தோல்வியோடு தமது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் T20 தொடருடன் சேர்த்து, ஒருநாள் தொடரினையும் இழந்திருக்கின்றது. 

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (14), என்டிகுவா நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவர் கீரோன் பொலார்ட் இலங்கை கிரிக்கெட் அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணியினர் இந்த ஒருநாள் தொடரினை ஏற்கனவே, 2-0 எனப் பறிகொடுத்திருந்த காரணத்தினால் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் தமது ஆட்டத்தினை தொடங்கினர்.  

தொடர்ந்து முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பத்தினை இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சினை சமாளிக்க தடுமாற்றம் காட்டிய போதும் இளம் துடுப்பாட்ட வீரர்களான அஷேன் பண்டார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். 

>> மே.இ.தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் ஜேசன் ஹோல்டர்

பின்னர், இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்கள் பெற்றது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக, இலங்கை அணியின் 07ஆம் விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களாக இணைப்பாட்டமாகப் பகிர்ந்த வனிந்து ஹஸரங்க, அஷேன் பண்டார ஜோடியில், வனிந்து ஹஸரங்க தனது கன்னி ஒருநாள் அரைச்சதத்துடன் 60 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில், அஷேன் பண்டார தனது 02ஆவது அரைச்சதத்துடன் 55 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில் அகில் ஹொசைன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அல்ஷாரி ஜொசப் மற்றும் ஜேசன் மொஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர். 

>> தொடரும் துரதிஷ்டங்களால் வாய்ப்புகளை இழக்கும் வருண் சக்கரவர்த்தி?

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 275 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தனர். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த டர்ரன் ப்ராவோ, தன்னுடைய 04ஆவது சதத்துடன் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்களாக 132 பந்துகளில் 102 ஓட்டங்களை எடுத்தார். அதேநேரம், ஷேய் ஹோப் (64), அணித்தலைவர் கீரொன் பொலார்ட் ஆகியோரும் அரைச்சதங்கள் பெற்று தமது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது. 

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை மேற்கிந்திய தீவுகள் அணியின் டர்ரன் ப்ராவோ பெற்றுக்கொள்ள, தொடர் நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் ஷேய் ஹோப் தெரிவாகினார். 

ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்திருக்க, இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்குபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்ததாக, எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
274/6 (50)

West Indies
276/5 (48.3)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka c Fabian Allen b Alzarri Joseph 36 38 6 0 94.74
Dimuth Karunarathne b Jason Mohammed 31 46 1 1 67.39
Pathum Nissanka lbw b Akeal Hosein 24 25 3 0 96.00
Dinesh Chandimal b Akeal Hosein 16 27 2 0 59.26
Dasun Shanaka b Akeal Hosein 22 27 1 0 81.48
Ashen Bandara not out 55 74 3 1 74.32
Thisara Perera run out () 3 4 0 0 75.00
Wanindu Hasaranga not out 80 60 7 3 133.33


Extras 7 (b 0 , lb 2 , nb 1, w 4, pen 0)
Total 274/6 (50 Overs, RR: 5.48)
Did not bat Suranga Lakmal, Lakshan Sandakan, Asitha Fernando,

Bowling O M R W Econ
Jason Holder 6 0 53 0 8.83
Alzarri Joseph 10 0 51 1 5.10
Jason Mohammed 10 0 49 1 4.90
Anderson Phillip 6 0 43 0 7.17
Akeal Hosein 10 0 33 3 3.30
Fabian Allen 8 0 43 0 5.38


Batsmen R B 4s 6s SR
Evin Lewis b Suranga Lakmal 13 16 2 0 81.25
Shai Hope c Suranga Lakmal b Thisara Perera 64 72 3 2 88.89
Jason Mohammed b Wanindu Hasaranga 8 13 1 0 61.54
Darren Bravo, c Dimuth Karunarathne b Suranga Lakmal 102 132 5 4 77.27
Nicholas Pooran lbw b Danushka Gunathilaka 15 8 0 2 187.50
Kieron Pollard not out 53 42 4 1 126.19
Jason Holder not out 14 10 1 1 140.00


Extras 7 (b 2 , lb 0 , nb 2, w 3, pen 0)
Total 276/5 (48.3 Overs, RR: 5.69)
Did not bat Fabian Allen, Anderson Phillip, Alzarri Joseph, Akeal Hosein,

Bowling O M R W Econ
Suranga Lakmal 9.3 1 56 2 6.02
Asitha Fernando 8 0 62 0 7.75
Wanindu Hasaranga 10 0 49 1 4.90
Thisara Perera 5 0 27 1 5.40
Danushka Gunathilaka 6 0 28 1 4.67
Lakshan Sandakan 10 2 52 0 5.20



முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணியினர் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<