RCB அணியில் விளையாடவுள்ள நியூசிலாந்தின் இளம் வீரர்!

Indian Premier League 2021

184
IPLT20.COM

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கடந்த ஆண்டு விளையாடியிருந்த அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் ஜோஸ் பிலிப்பிக்கு பதிலாக, நியூசிலாந்து விக்கெட் காப்பாளர் பின் எலன் இணைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு இணைக்கப்பட்ட இளம் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பிலிப்பி, 5 போட்டிகளில் விளையாடியிருந்தார். குறித்த 5 போட்டிகளில் 78 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தார்.

இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் CSK

எனினும், இந்த ஆண்டுக்கான தொடரில் அவரால் விளையாட முடியாது என கேட்டுக்கொண்டதற்கு அடிப்படையில், ஜோஸ் பிலிப்பி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது, நியூசிலாந்தின் சுப்பர் ஸ்மேஷ் தொடரில் அபாரமான துடுப்பாட்ட திறனை வெளிப்படுத்திய பின் எலன் இணைக்கப்பட்டுள்ளார்.

சுப்பர் ஸ்மேஷ் தொடரில் 25 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 512 ஓட்டங்களை பின் எலன் பெற்றுக்கொண்டதுடன், இவரது ஓட்ட வேகம் 194 ஆக அதிகரித்திருந்தது. அத்துடன், இவர் விளையாடிய வெலிங்டன் பையர்பேர்ட்ஸ் அணி கிண்ணத்தையும் கைப்பற்றியிருந்தது.

விக்கெட் காப்பாளரான பின் எலன், முதற்தடவையாக ஐ.பி.எல். தொடருக்கான அணியொன்றில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஜோஸ் பிலிப்பிக்கு வழங்கப்பட்ட 20 இலட்சம் (இந்திய ரூபாய்) பின் எலனுக்கும் வழங்கப்படவுள்ளது.

ஜோஸ் பிலிப்பி, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து விலகியமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர், இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதுடன், இரண்டு போட்டிகளில் 40இற்கு அதிகமான ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி மே மாதம் 30 திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<