மேஜர் T20 லீக்கில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த அசேல, திக்ஷில மற்றும் தனன்ஜய லக்ஷான்

SLC Major Club T20 Tournament 2020/21

315

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மேஜர் T20 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்தின் இரண்டாவது நாளில் ஆறு போட்டிகள் இன்று (10) நிறைவுக்கு வந்தன.

A பிரிவுக்காக நடைபெற்ற போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியது.

கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கான லசித் அபேரட்ன அரைச்சதம் அடித்து கைகொடுக்க, மலிந்த புஷ்பகுமார 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

>>உள்ளூர் T20 லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வரும் அஞ்சலோ பெரேரா

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற இளம் சகலதுறை வீரரான தனன்ஜய லக்ஷானின் அரைச் சதத்தின் உதவியால் ப்ளூம்பீல்ட் கழகத்தை 20 ஓட்டங்களால் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் வீழ்த்தியது.

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியை, அசேல குணரட்னவின் சகலதுறை ஆட்டத்தின் மூலமாக இராணுவ கிரிக்கெட் கழகம் வெற்றிக்கொண்டது.

இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 58 ஓட்டங்களை எடுத்த அசேல குணரட்ன, பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே சீரற்ற காலநிலையால் BRC எதிர் நுகெகொட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டியும், சரசென்ஸ் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டியும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

(SSC மைதானம்)

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 91/10 (18.4) – விஷ்வ விஜேரட்ன 36, மலிந்த புஷ்பகுமார 4/09, லஹிரு மதுஷங்க 3/25

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 92/6 (15.3) – லசித் அபேரட்ன 53, சச்சித்ர பெரேரா 3/13, இஷித விஜேரட்ன 3/24

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேஜர் T20 லீக்கில்துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மினோத், அஷான் மற்றும் அஞ்சலோ பெரேரா

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

(CCC மைதானம்)

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 146/8 (20) – தனன்ஜய லக்ஷான் 63, சங்கீத் குரே 33, திலீப ஜயலத் 2/15

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 126/6 (20) – சச்சின் ஜயவர்தன 32, ஹர்ஷ விதான 25, சாரங்க ராஜகுரு 3/22

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 20 ஓட்டங்களால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

(கோல்ட்ஸ் கழக மைதானம்)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 164/7 (20) – திக்ஷில டி சில்வா 54, ருமேஷ் புத்திக 36, லசித் குரூஸ்புள்ளே 29, மலித் டி சில்வா 3/22, தனால் ஹேமானந்த 2/35

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 130/8 (20) – சுஜான் மயுர 29, துலாஷ் உதயங்க 25, புலின தரங்க 3/23, ரவீன் யசஸ் 2/17

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி

>>Video – தோல்வியிலும் சாதித்துக் காட்டிய இலங்கை வீரர்கள்..!|Sports RoundUp – Epi 152

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

(கட்டுநாயக்க மைதானம்)

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 141/4 (20) – சமீன் கந்தனாரச்சி 55, சச்சித ஜயதிலக 26*, அசேல குணரட்ன 2/22

இராணுவ கிரிக்கெட் கழகம் – 143/3 (16.3) – அசேல குணரட்ன 58*, ஹிமாஷ லியனகே 51*, சரித் ராஜபக்ஷ 2/15

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<