ஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு

250

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடரில் விளையாடி வருகின்ற ஆறு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தொடரை ஒத்திவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெற்று வந்தன

இதன்படி, ஒட்டுமொத்தமாக நடைபெறவுள்ள 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் இதுவரை முடிவடைந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் இடையிலான போட்டி தீடீரென இரத்து செய்யப்பட்டது

கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட PSL போட்டி

இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் பவாத் அஹ்மட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குறித்த போட்டியை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, பெயர் குறிப்பிடப்படாத இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பணிக்குழாம் ஊழியர் உள்ளிட்ட நால்வர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்

இதில் குவாட்டா க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விiளாடிய இங்கிலாந்து வீரர் டொம் பெண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதை டுவிட்டர் மூலம் அவர் உறுதி செய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

எனவே, கொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும், பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டமை மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது

இந்நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளானோர் தொகை அதிகரித்ததன் காரணமாக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக இன்று (04) அறிவிக்கப்பட்டது.

போட்டி ஏற்பாட்டுக் குழு, அணி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உடனடி நடவடிக்கையாக, பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. பங்கேற்ற ஆறு அணிகளுக்கும் மீண்டும் பிசிஆர் சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்  என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடகப் பணிப்பாளர் சமி உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

அகில ஹெட்ரிக்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட்_

முன்னதாக, இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பு லாகூர் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்

அதேபோல பெஸாவர் ஷல்மி அணியின் டேரன் சமியும், அணித் தலைவர்  வஹாப் ரியாஸும் கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி தங்களுடைய அணியின் உரிமையாளரைச் சந்தித்தார்கள்

இதையடுத்து இருவருக்கும் இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் கிறிஸ்டியன், தொடரை விட்டு விலகிக் கொள்வதாக இன்று காலை அறிவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<