இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டொம் மூடி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இறுதி தருணத்தில் பதவி விலகிய சமிந்த வாஸ்!
அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆலோசக நியமன அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் டொம் மூடி, தனது பதவிக்காலத்திற்குள் 300 நாட்கள் கொண்ட கட்டாய பணி ஒன்றில் வேலை செய்ய வேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
டொம் மூடியின் நியமனத்தினை இன்று (28) உறுதி செய்திருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, மூடியின் கிரிக்கெட் இயக்குனர் பதவிக்காலம் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையின் கிரிக்கெட் விவகாரங்களை மீள ஒழுங்கமைக்கும் நோக்கில், விளையாட்டுத்துறை அமைச்சரினால் உருவாக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டினுடைய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டொம் மூடிக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள், T20I குழாத்தை அறிவித்த மே.தீவுகள்
புதிய நியமனம் பெற்றுள்ள டொம் மூடி இலங்கை கிரிக்கெட் அணியினுடைய எதிர்கால கிரிக்கெட் தொடர்கள், உள்ளூர் கிரிக்கெட் தொடரின் கட்டமைப்பு, வீரர்களின் நலன்புரி விடயங்கள், திறமை விருத்தி என்பவற்றுடன் சேர்த்து இன்னும் பல விடயங்களில் கவனம் செலுத்துவார் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடும் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டொம் மூடி மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணி பணிபுரிய வந்திருக்கும் விடயம் தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஏஷ்லி டி சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கை T20 அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ்
”கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பணிபுரிந்து டொம் (மூடி) சிறந்த பெறுபேறுகளை காட்டியிருந்தார். இவ்வாறான தொகுதிகளுக்கு பணிபுரிவதற்கு அவர் கொண்டிருக்கும் அறிவு தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் எமது விளையாட்டுக்கு பெறுமதியான ஒருவராக இருப்பார்.”
இலங்கை அணியின் கிரிக்கெட் இயக்குனராக மாறியிருக்கும் டொம் மூடி, ஐ.பி.எல். தொடரில் ஆடும் சன்ரைஸர்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<