“BAOSHENG LANKA INVESTMENT HOLDING PVT LIMITED” நிறுவனத்தின் அனுசரணையுடன், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் (SLVF) நடத்தும் கெலக்ஸி கிண்ண (Galaxy Cup) கரப்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட தொடர் குறித்த ஊடக சந்திப்பு, தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைமையகத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது.
>> மார்ச்சில் ஆரம்பமாகும் கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட தொடர்
குறித்த இந்த தொடர், தேசிய அணிக்கு செல்லக்கூடிய திறமையைக்கொண்ட வீரர்களை கண்டறிந்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களை முன்னேற்றுவதையும் நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டித் தொடரில் 25 வயதிற்குட்பட்ட (01.01.1997ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள்) வீர, வீராங்கனைகள் மாத்திரமே பங்கேற்கமுடியும். தொடரில் 8 ஆண்கள் அணிகள் மற்றும் 10 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், போட்டிகள் லீக் அடிப்படையில் நடைபெறவுள்ளன.
Photo Album – Galaxy Cup Volleyball Championship 2021 – Press conference
போட்டித் தொடரில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபா (10 இலட்சம்) பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா 5 இலட்சம் மற்றும் 2 இலட்சம் என பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. அதேநேரம், சிறந்த திறமையை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் மார்ச் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை காலி – தடுல்ல கரப்பந்தாட்ட இல்லத்தில் நடைபெறவுள்ளதுடன், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 26, 27ஆம் திகதிகளில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளன. அதேநேரம், இறுதிப் போட்டியானது, ஏப்ரல் 10ஆம் திகதி திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரில் பங்கேற்கும் அணிகள்
ஆடவர் அணிகள்
- இலங்கை இராணுவ விளையாட்டு கழகம்
- இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்
- இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்
- தேசிய இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுக் கழகம்
- நாத்தாண்டிய யுனைடெட் விளையாட்டு கழகம்
- இலங்கை மின்சார சபை விளையாட்டு கழகம்
- ஜோசப் வாஸ் விளையாட்டு கழகம்
- களுத்துறை கோல்டன் டைகர்ஸ் விளையாட்டு கழகம்
பெண்கள் அணிகள்
- இலங்கை இராணுவ விளையாட்டு கழகம்
- இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்
- இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்
- தேசிய இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு கழகம்
- ஹைட்ராமணி விளையாட்டு கழகம்
- மஹவுஸ்வெவ விளையாட்டு கழகம்
- MAS Casualline விளையாட்டு கழகம்
- கோல்டன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம்
- ஹூங்கம விஜயபா விளையாட்டு கழகம்
- அம்பாறை சுப்பர் கிங்ஸ் விளையாட்டு கழகம்
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<