கோலூன்றிப் பாய்தலில் ஒலிம்பிக் சம்பியனை வீழ்த்திய இலங்கை வம்சாவளி வீராங்கனை

298
Helen Claudia Instragram

இலங்கை வம்சாவளி வீராங்கனையான கிரேக்கத்தைச் சேர்ந்த எலனி க்ளவுதியா பொலாக், கிரேக்கத்தில் கடந்த வாரம் (13) நடைபெற்ற பேன் ஹெலனிக் உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.  

குறித்த போட்டியில் 4.71 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், தனது தனிப்பட்ட அதிசிறந்த உயரத்தைப் பதிவுசெய்து ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தைப் பூர்த்தி செய்தார்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான புதிய திகதி அறிவிப்பு

இதில் சிறப்பம்சம் என்னவெனில், 2016 றியோ ஒலிம்பிக்கில் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதன்னம் வென்ற கிரேக்கத்தைச் சேர்ந்த கெதரினா ஸ்டெபானிடியை அவர் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், போட்டியின் பிறகு எலனி கள்வுதியா அருண பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில்,

”உண்மையில் இந்த வெற்றியானது கனவாக உள்ளது. ஒலிம்பிக் சம்பியன் ஸ்டெபானியுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனது பயிற்சியாளரும் இதே நிலைப்பாடுடன் தான் இருந்தார். ஆனால், 4.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கான நம்பிக்கை எனக்கு உண்டு. எதிர்காலத்தில் சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இன்னும் இன்னும் சாதனை படைக்க எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்

24 வயதான ஹெலன் க்ளவுதியா, பிரான்ஸில் கடந்த வாரம் நடைபெற்ற உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

கோலூன்றிப் பாய்தலில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்குகொண்ட குறித்த போட்டியில் 4.50 மீற்றர் உயரத்தை அவர் தாவியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்தப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஹோலி ப்ரெட்ஷோ, 4.73 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தார்

60 மீற்றரில் உலகின் 3ஆவது வேகமான வீரரான யுபுன் அபேகோன்

முன்னதாக, கடந்த 7ஆம் திகதி பிரான்ஸின் ரோவனில் நடைபெற்ற உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொண்ட எலனி க்ளவுதியா, 4.62 மீற்றர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

கோலூன்றிப் பாய்தலில் உலகின் முன்னணி வீராங்கனைகள் மாத்திரம் பங்குகொண்ட இந்தப் போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக தரவரிசையில் 26ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள எலனி க்ளவுதியாவின் தாயார் இலங்கையின் ஹொரனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பொலஸ்ம் என்றழைப்படுகின்ற அவரது தாயார், போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்துள்ளார்

தெற்காசிய விளையாட்டு விழா குறித்து பாகிஸ்தானில் சிறப்புக் கூட்டம்

சிறு வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்த எலனி க்ளவுதியா, பிற்காலத்தில் அந்நாட்டின் மெய்லல்லுனர் பயிற்சியாளர்களின் அவதானத்தைப் பெற்று கோலூன்றிப் பாய்தல் விளையாட்டில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<