டுபாய் க்ராண்ட் ப்ரிக்ஸ் 2021 – பாஷா இன்டர்நெசனல் பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கையைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் க்ராண்ட் ப்ரிக்ஸ் 2021 – பாஷா இன்டர்நெசனல் பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மொத்தமான க்ராண்ட் ப்ரிக்ஸ் பருவகாலத்துடன், பாஷா இன்டர்நெசனல் பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், இந்த ஆண்டு தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதுடன், டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஓலிம்பிக் தொடருக்கான தகுதிகாண் போட்டியாகவும், இந்த தொடர் அமையவுள்ளது.
குறித்த இந்த தொடரில் பங்கேற்கவுள்ள 6 வீரர்களில், 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் பங்கேற்கவுள்ளனர். இலங்கையின் முதற்தர பரா ஒலிம்பிக் வீரரான தினேஷ் ப்ரியந்த, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ள போதும், இவர் ஏற்கனவே, 2021ம் ஆண்டு பரா ஓலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி
டினேஷ் ப்ரியந்த (ஈட்டி எறிதல்), அமர இந்துமதி (நீளம் பாய்தல், 400 மீற்றர், குமுது ப்ரியங்க (நீளம் பாய்தல், 100 மீற்றர், காமினி ஏகநாயக்க (ஈட்டி எறிதல்), சமன் சுபாசிங்க (400 மீற்றர்), பாலித பண்டார (குண்டெறிதல்), சம்பத் ஹெட்டியாராச்சி (ஈட்டி எறிதல்), நுவான் இந்திய (நீளம் பாய்தல், சமிதா டுலான் (ஈட்டி எறிதல்), புத்திக இந்ரபால (நீளம் பாய்ந்தல்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<