“Born Again” குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை

624

இலங்கை கிரிக்கெட் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக இருக்கும் நிகழ்ச்சிதிட்டங்களை நடைமுறைப்படுத்த முயல்வதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் “Born Again” என்னும் பெயரிலான குற்றச்சாட்டினை, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முற்றாக மறுத்திருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் சனிக்கிழமை (30) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, அதில் இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தமக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தினை தருவதாக குறிப்பிட்டிருக்கின்றது. 

Video – வேட்டையாடப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி | Cricket Galatta Epi 49

”(சிலரின்) இலாபங்களுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகத்தினர் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவின் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உபயோகம் செய்வதாக வெளியாகியிருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையானது மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றினை அடைகின்றது. இந்த குற்றச்சாட்டுக்களை லாபம் பெற முனைகின்றனவர்கள்,  “Born Again” என அழைக்கின்றனர்.”

மேலும் இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுப்பதாக தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, ஐ.சி.சி. இன் விதிமுறைகளுக்கு அமைய எந்தவித பாகுபாடுகள், பாரபட்சமின்றியே தாம் நடப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது. 

அதோடு, லாபம் பெற முனைபவர்கள் இந்த நாட்டில் சாதி. மத வேறுபாடின்றி அனைவரினையும் ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாக கிரிக்கெட் விளையாட்டு இருப்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

லொக்குஹெட்டிகே குற்றம் செய்துள்ளமையை கண்டறிந்த ஐசிசி

இன்னும், இலங்கை கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் சாதனை செய்தவர்கள் எந்த பாகுபாடுகளுமின்றி வாய்ப்பு வழங்கப்பட்டே தங்களது திறமையினை வெளிக்காட்டியிருந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் சபையானது நினைவூட்டியிருக்கின்றது.

அதோடு, தேசிய அணியினை பிரதிநிதித்தும் செய்யும் ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் பின்பற்றும் மதம் தொடர்பில் தாம் கருத்திற் கொள்வதில்லை எனக் கூறியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக அவர்களுக்கு  தாங்கள் விரும்பும் மதத்தினைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது. 

எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாக எந்த மதத்தினரினதும் நிகழ்ச்சித் திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறியிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை இலங்கையர் அனைவரினையும் ”ஒரு அணி ஒரு தேசம்” என்னும் சுலோகத்திற்கு அமைய தேசிய கிரிக்கெட் அணிக்கு பின்னர் ஒன்று திரளுமாறு தெரிவித்திருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<