சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
>>முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல்<<
இன்றைய நாளுக்கான போட்டியில் இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டு இன்றைய நாளுக்கான ஆதிக்கத்தை தமதாக்கியிருக்கின்றனர்.
காலியில் நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (23) நிறைவுக்கு வந்தது.
போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 229 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் 107 ஓட்டங்களுடனும், நிரோஷன் டிக்வெல்ல 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று (23) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. ஜேம்ஸ் அன்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மெதிவ்ஸ் 11 பௌண்டரிகள் அடங்கலாக 238 பந்துகளுக்கு 110 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினை அடுத்து அறிமுகவீரராக இப்போட்டியில் களமிறங்கியிருந்த ரமேஷ் மெண்டிஸ் களம் வந்தார். எனினும், அவரினால் ஓட்டங்கள் எதனையும் பெற முடியவில்லை.
>>மெதிவ்ஸ் – சந்திமால் இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை அணி<<
பின்னர் களத்தில் இருந்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் புதிய துடுப்பாட்டவீரர் டில்ருவான் பெரேரா ஆகிய இருவரும் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியினை கட்டியெழுப்பினர். அதன்படி, இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காது இரண்டாம் நாளுக்குரிய மதிய போசண இடைவேளையினை அடைந்தது.
மதிய போசண இடைவேளையினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் 07ஆம் விக்கெட்டுக்காக 89 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பகிரப்பட்ட நிலையில் நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழந்தார்.
ஜேம்ஸ் அன்டர்சனின் புதிய விக்கெட்டாக மாறிய நிரோஷன் டிக்வெல்ல தன்னுடைய 16ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 144 பந்துகளுக்கு 10 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை எடுத்து சதம் பெறும் வாய்ப்பினை 8 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார்.
டிக்வெல்லவினை அடுத்து டில்ருவான் பெரேராவின் பொறுப்பான துடுப்பாட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் 139.3 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 381 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில், டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 07ஆவது அரைச்சதம் பூர்த்தி செய்த டில்ருவான் பெரேரா 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 67 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜேம்ஸ் அன்டர்சன் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும், சேம் கர்ரன் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தனர்.
பின்னர், இரண்டாம் நாளுக்குரிய போட்டியின் மூன்றாம் இடைவெளியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
>>Video – IPL இல் புது அவதாரம் எடுக்கவுள்ள Kumar Sangakkara…!<<
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் நிற்கும் ஜோ ரூட் தன்னுடைய 50ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்து 67 ஓட்டங்களுடனும், ஜொன்னி பெயர்ஸ்டோவ் 24 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத்தில் நெருக்கடி உருவாக்கியிருந்த லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியருந்தார்.
தற்போது இலங்கை அணியினை விட 286 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் மூன்றாம் நாளில் நாளை (24) தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடரவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Jos Buttler b James Anderson | 43 | 95 | 5 | 0 | 45.26 |
Kusal Perera | c Joe Root b James Anderson | 6 | 14 | 1 | 0 | 42.86 |
Oshada Fernando | b James Anderson | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c Jos Buttler b James Anderson | 110 | 238 | 11 | 0 | 46.22 |
Dinesh Chandimal | lbw b Mark Wood | 52 | 121 | 4 | 1 | 42.98 |
Niroshan Dickwella | c Jack Leach b James Anderson | 92 | 144 | 10 | 0 | 63.89 |
Ramesh Mendis | c Jos Buttler b Mark Wood | 0 | 16 | 0 | 0 | 0.00 |
Dilruwan Perera | c Jack Leach b Sam Curran | 67 | 170 | 8 | 1 | 39.41 |
Suranga Lakmal | c Zak Crawley b James Anderson | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | c Joe Root b Mark Wood | 7 | 33 | 0 | 1 | 21.21 |
Asitha Fernando | not out | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0) |
Total | 381/10 (139.3 Overs, RR: 2.73) |
Fall of Wickets | 1-7 (4.1) Kusal Perera, 2-7 (4.5) Oshada Fernando, 3-76 (26.2) Lahiru Thirimanne, 4-193 (68.6) Dinesh Chandimal, 5-232 (88.6) Angelo Mathews, 6-243 (91.6) Ramesh Mendis, 7-332 (120.4) Niroshan Dickwella, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
James Anderson | 29 | 13 | 40 | 6 | 1.38 | |
Sam Curran | 18.3 | 3 | 60 | 1 | 3.28 | |
Jack Leach | 38 | 5 | 119 | 0 | 3.13 | |
Mark Wood | 28 | 4 | 84 | 3 | 3.00 | |
Dominic Bess | 26 | 2 | 76 | 0 | 2.92 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dominic Sibley | lbw b Lasith Embuldeniya | 0 | 14 | 0 | 0 | 0.00 |
Zak Crawley | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 5 | 24 | 0 | 0 | 20.83 |
Jonathan Bairstow | c Oshada Fernando b Lasith Embuldeniya | 28 | 73 | 5 | 0 | 38.36 |
Joe Root | run out (Oshada Fernando) | 186 | 309 | 18 | 0 | 60.19 |
Dan Lawrence | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 3 | 21 | 0 | 0 | 14.29 |
Jos Buttler | c Oshada Fernando b Ramesh Mendis | 55 | 95 | 7 | 0 | 57.89 |
Sam Curran | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 13 | 43 | 0 | 1 | 30.23 |
Dominic Bess | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 32 | 95 | 4 | 0 | 33.68 |
Mark Wood | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Jack Leach | lbw b Dilruwan Perera | 1 | 17 | 0 | 0 | 5.88 |
James Anderson | not out | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Extras | 16 (b 8 , lb 3 , nb 5, w 0, pen 0) |
Total | 344/10 (116.1 Overs, RR: 2.96) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 16 | 7 | 31 | 0 | 1.94 | |
Lasith Embuldeniya | 42 | 6 | 137 | 7 | 3.26 | |
Asitha Fernando | 10 | 2 | 31 | 0 | 3.10 | |
Dilruwan Perera | 32.1 | 4 | 86 | 1 | 2.68 | |
Ramesh Mendis | 16 | 1 | 48 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Perera | lbw b Jack Leach | 14 | 25 | 2 | 0 | 56.00 |
Lahiru Thirimanne | c Zak Crawley b Jack Leach | 13 | 33 | 0 | 0 | 39.39 |
Oshada Fernando | c Zak Crawley b Dominic Bess | 3 | 19 | 0 | 0 | 15.79 |
Angelo Mathews | b Dominic Bess | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Dinesh Chandimal | c James Anderson b Jack Leach | 9 | 6 | 2 | 0 | 150.00 |
Niroshan Dickwella | c Dan Lawrence b Dominic Bess | 7 | 14 | 1 | 0 | 50.00 |
Ramesh Mendis | c Jos Buttler b Jack Leach | 16 | 20 | 3 | 0 | 80.00 |
Dilruwan Perera | c Zak Crawley b Dominic Bess | 4 | 13 | 0 | 0 | 30.77 |
Suranga Lakmal | not out | 11 | 32 | 1 | 0 | 34.38 |
Lasith Embuldeniya | c Jonathan Bairstow b Joe Root | 40 | 42 | 6 | 1 | 95.24 |
Asitha Fernando | b Joe Root | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 3 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 126/10 (35.5 Overs, RR: 3.52) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
James Anderson | 2 | 0 | 6 | 0 | 3.00 | |
Sam Curran | 2 | 0 | 9 | 0 | 4.50 | |
Dominic Bess | 16 | 1 | 49 | 4 | 3.06 | |
Jack Leach | 14 | 1 | 59 | 4 | 4.21 | |
Joe Root | 1.5 | 1 | 0 | 2 | 0.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | c Oshada Fernando b Lasith Embuldeniya | 13 | 19 | 1 | 0 | 68.42 |
Dominic Sibley | not out | 56 | 144 | 2 | 0 | 38.89 |
Jonathan Bairstow | lbw b Lasith Embuldeniya | 29 | 28 | 3 | 1 | 103.57 |
Joe Root | b | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Dan Lawrence | c Niroshan Dickwella b Lasith Embuldeniya | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Jos Buttler | not out | 46 | 48 | 1 | 0 | 95.83 |
Extras | 7 (b 0 , lb 4 , nb 3, w 0, pen 0) |
Total | 164/4 (43.3 Overs, RR: 3.77) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 20 | 3 | 73 | 3 | 3.65 | |
Dilruwan Perera | 13.3 | 1 | 39 | 0 | 2.93 | |
Ramesh Mendis | 10 | 0 | 48 | 1 | 4.80 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<