பங்களா டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி

266

இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் விளையாடவுள்ள பங்களா டைகர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலின கண்டம்பி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான திலின கண்டம்பி, கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றார். 

அதன்படி, கடந்த ஆண்டு இலங்கையில் முதல்முறையாக நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் திலின கண்டம்பி பயிற்றுவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. 

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றியினைத் தொடர்ந்து திலின கண்டம்பிக்கு, பங்களா டைகர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறுகின்ற வாய்ப்பு கிட்டியிருக்கின்றது. 

>> பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாட ஆமிர் தயார்

மறுமுனையில் திலின கண்டம்பி பயிற்றுவிக்கவுள்ள பங்களா டைகர்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான இசுரு உதான வீரர்களில் ஒருவராக விளையாடவிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இதேவேளை, இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது பருவம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<