இங்கிலாந்து அணியுடன் இணையும் மொயின் அலி

246
Moeen Ali

கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் மொயின் அலி, 13 நாட்களுக்கான சுயதனிமைப்படுத்தலினை பூர்த்தி செய்த பின்னர் தனது அணியுடன் மீண்டும் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> லசித் எம்புல்தெனியவுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை – டோவிட் சார்கர்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த தொடருக்காக இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற மொயின் அலி, அவரது தாயகத்தில் கொவிட் தொற்று அற்றவர் என உறுதி செய்யப்பட்ட போதும் இலங்கை வந்த பின்னர் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட 10 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுத்திருந்தார்.

எனினும், ஐக்கிய இராச்சியத்தில் உருவான புதிய கொவிட்-19 வைரஸ் தொற்றின் அச்சம் கருதி இலங்கை அரசினால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கு அமைய மொயின் அலியின் சுயதனிமைப்படுத்தல் காலம் 13 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு 13 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலை முகம்கொடுத்த மொயின் அலி, புதிய பரிசோதனைகளில் கொவிட்-19 வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, தனது அணியுடன் மீள இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

>> பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி

அதோடு இங்கிலாந்து அணியில் இணைந்திருக்கும் மொயின் அலி, உயிர் பாதுகாப்பு வலயத்தில் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், மொயின் அலி பயிற்சிகளில் ஈடுபட்ட போதும் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற காரணத்தினால் அவர் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கருதப்படுகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<