Home Tamil இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்க அணி

இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்க அணி

269
AFP

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

மேலும், இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. 

இரட்டைச் சதத்தினை தவறவிட்ட டு பிளேசிஸ்; தென்னாபிரிக்க அணி வலுவான நிலையில்

செஞ்சூரியன் நகரில் கடந்த சனிக்கிழமை (26) தொடக்கம் நடைபெற்றுவருகின்ற இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (28) நிறைவுக்கு வந்திருந்தது. 

போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸினை (396) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 621 ஓட்டங்களை எடுத்திருந்ததுடன், இதன் பின்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் இருந்த குசல் ஜனித் பெரேரா 23 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 21 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

இன்று (29) தென்னாபிரிக்க அணியினை விட 160 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு இன்றைய நாளின் தொடக்கத்திலேயே விக்கெட் ஒன்று பறிபோனது சரிவினை ஏற்படுத்தியது. இன்றைய நாளில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறிய தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். 

இதன் பிறகு, குசல் ஜனித் பெரேரா, வனிந்து ஹஸரங்க ஆகியோர் அரைச்சதம் பெற்று போராடிய போதும் ஏனைய துடுப்பாட்டவீரர்கள் பிரகாசிக்காத காரணத்தினாலும், உபாதைச் சிக்கல்களினாலும் நான்காம் நாளின் மதிய போசண இடைவேளையினை அடுத்து இலங்கை அணி 46.1 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 180 ஓட்டங்களுடன் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக குசல் ஜனித் பெரேரா தன்னுடைய 6ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 64 ஓட்டங்களை குவித்திருக்க, தனது கன்னி டெஸ்ட் அரைச் சதத்தினைப் பெற்ற வனிந்து ஹஸரங்க 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் என்ட்ரிஜ் நோர்கியே, லுத்தோ சிபம்லா, லுங்கி ன்கிடி மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். 

இப்போட்டியின் வெற்றியோடு தென்னாபிரிக்க அணி ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 60 புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரரான பாப் டு பிளேசிஸ் பெற்றுக்கொண்டார்.

முதல் டெஸ்டிலிருந்து ராஜித நீக்கம்! குமார, வனிந்துவுக்கு உபாதை!

அடுத்ததாக இரண்டு அணிகளும் மோதுகின்ற இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (03) ஜொஹன்னஸ்பேர்க் நகரில் ஆரம்பமாகின்றது. 

ஸ்கோர் சுருக்கம்

Result


South Africa
621/10 (142.1)

Sri Lanka
396/10 (96) & 180/10 (46.1)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 22 20 4 0 110.00
Kusal Perera c Quinton de Kock b Wiaan Mulder 16 29 2 0 55.17
Kusal Mendis c Lungi Ngidi b Anrich Nortje 12 16 2 0 75.00
Dinesh Chandimal c Faf du Plessis b Wiaan Mulder 85 161 11 0 52.80
Dhananjaya de Silva retired 79 105 11 1 75.24
Niroshan Dickwella lbw b Wiaan Mulder 49 86 6 0 56.98
Dasun Shanaka not out 66 87 3 5 75.86
Wanindu Hasaranga b Lutho Sipamla 18 20 3 0 90.00
Kasun Rajitha c Dean Elgar b Lutho Sipamla 12 49 2 0 24.49
Vishwa Fernando b Lutho Sipamla 0 1 0 0 0.00
Lahiru Kumara c Rassie van der Dussen b Lutho Sipamla 0 7 0 0 0.00


Extras 37 (b 16 , lb 9 , nb 6, w 6, pen 0)
Total 396/10 (96 Overs, RR: 4.12)
Fall of Wickets 1-28 (4.5) Dimuth Karunarathne, 2-54 (9.5) Kusal Mendis, 3-54 (10.5) Kusal Perera, 4-284 (65.4) Dinesh Chandimal, 5-296 (70.3) Niroshan Dickwella, 6-320 (76.3) Wanindu Hasaranga, 7-387 (93.2) Kasun Rajitha, 8-387 (93.3) Vishwa Fernando, 9-396 (95.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Lungi Ngidi 19 3 64 1 3.37
Lutho Sipamla 16 1 76 4 4.75
Anrich Nortje 22 3 88 1 4.00
Wiaan Mulder 20 4 69 3 3.45
Keshav Maharaj 19 3 74 0 3.89
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c & b Dasun Shanaka 95 130 16 0 73.08
Aiden Markram c Dasun Shanaka b Vishwa Fernando 68 94 14 0 72.34
Rassie van der Dussen c Niroshan Dickwella b Lahiru Kumara 15 42 2 0 35.71
Faf du Plessis c & b 199 276 24 0 72.10
Quinton de Kock c Lahiru Thirimanne b Wanindu Hasaranga 18 11 3 0 163.64
Temba Bavuma c Niroshan Dickwella b Dasun Shanaka 71 125 7 0 56.80
Wiaan Mulder c Niroshan Dickwella b Wanindu Hasaranga 36 63 4 1 57.14
Keshav Maharaj c Wanindu Hasaranga b Vishwa Fernando 73 106 6 2 68.87
Anrich Nortje c Niroshan Dickwella b Vishwa Fernando 0 3 0 0 0.00
Lutho Sipamla lbw b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Lungi Ngidi not out 2 9 0 0 22.22


Extras 44 (b 9 , lb 18 , nb 7, w 10, pen 0)
Total 621/10 (142.1 Overs, RR: 4.37)
Fall of Wickets 1-141 (28.4) Aiden Markram, 2-200 (42.6) Rassie van der Dussen, 3-200 (43.4) Dean Elgar, 4-220 (47.1) Quinton de Kock,

Bowling O M R W Econ
Vishwa Fernando 31.1 2 130 2 4.18
Kasun Rajitha 2.1 0 16 0 7.62
Dasun Shanaka 28.5 2 98 2 3.44
Wanindu Hasaranga 45 5 171 4 3.80
Lahiru Kumara 21.1 0 103 1 4.88
Dimuth Karunarathne 6.5 0 36 0 5.54
Kusal Mendis 7 0 41 0 5.86


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 6 8 1 0 75.00
Kusal Perera c Quinton de Kock b Anrich Nortje 64 87 10 0 73.56
Kusal Mendis c Rassie van der Dussen b Lungi Ngidi 0 5 0 0 0.00
Dinesh Chandimal b Wiaan Mulder 25 45 4 0 55.56
Niroshan Dickwella c Quinton de Kock b Wiaan Mulder 10 15 2 0 66.67
Dasun Shanaka c Quinton de Kock b Lutho Sipamla 6 35 0 0 17.14
Wanindu Hasaranga c Temba Bavuma b Lutho Sipamla 59 53 12 1 111.32
Vishwa Fernando run out (Wiaan Mulder) 0 1 0 0 0.00
Kasun Rajitha c Keshav Maharaj b Anrich Nortje 0 27 0 0 0.00
Lahiru Kumara not out 0 5 0 0 0.00
Dhananjaya de Silva retired 0 0 0 0 0.00


Extras 10 (b 4 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 180/10 (46.1 Overs, RR: 3.9)
Fall of Wickets 1-10 (2.6) Dimuth Karunarathne, 2-22 (4.5) Kusal Mendis, 3-85 (19.5) Dinesh Chandimal, 4-99 (23.6) Niroshan Dickwella, 5-114 (28.4) Kusal Perera, 6-142 (35.5) Dasun Shanaka, 7-148 (36.6) Vishwa Fernando, 8-179 (45.2) Wanindu Hasaranga, 9-180 (46.1) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Lungi Ngidi 10 2 38 2 3.80
Anrich Nortje 10.1 1 47 2 4.65
Wiaan Mulder 12 1 39 2 3.25
Lutho Sipamla 5 0 24 2 4.80
Keshav Maharaj 6 3 20 0 3.33
Aiden Markram 3 2 6 0 2.00



முடிவு – தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<