புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சந்தேகம்

278
UK Flight barrier can affect

புதிய வகை கொவிட் வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய இராச்சியத்தில்  இருந்து வரும் விமானங்கள் அனைத்தினையும், புதன்கிழமை (22) நள்ளிரவு தொடக்கம் தற்காலிகமாக இரத்துச் செய்வதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்திருப்பதனைத் தொடர்ந்து இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. 

>> பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் ஆரம்பமாகின்றது. அதேநேரம், இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி ஜனவரி மாதம் 02ஆம் திகதி இலங்கை மண்ணை வந்தடைவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

எனினும், தற்போது உருவாகியிருக்கும் தடை காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பிட்ட திகதியில் இலங்கை வந்தடைவது சந்தேகமாக மாற, இரு அணிகள் பங்கேற்கின்ற டெஸ்ட் தொடர் நடைபெறுவதிலும் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன. 

ஐக்கிய இராச்சியத்தில் புதிதாக திரிபடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் ஒன்று இனம் காணப்பட்டுள்ளமையை காரணமாகக் கொண்டு இலங்கையுடன் சேர்த்து சுமார் 40 நாடுகள் ஐக்கிய இராச்சியத்துடனான விமானத்தொடர்புகளை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>> இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் ஜெக் கல்லிஸ்!

அதேநேரம், தற்போது தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டு வீரர்களுடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<