ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக்கின் 18வது போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொழும்பு கிங்ஸ் அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
LPL மூலம் எனது குறிக்கோளை அடைந்தேன் – தனுஷ்க குணதிலக்க
ஜப்னா ஸ்டாலியன்ஸ் – டொம் மூர்ஸ், மினோத் பானுக, ஜொன்ஸன் சார்ல்ஸ், சொஹைப் மலிக், திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, டுவானே ஒலிவியர், சுரங்க லக்மால், மஹேஸ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ
கொழும்பு கிங்ஸ் – லோரி எவன்ஸ், தினேஸ் சந்திமால், அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹமட், துஸ்மந்த சமீர, தரிந்து கௌஷால்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மஹேஸ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ மற்றும் டொம் மூர்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டனர். கொழும்பு கிங்ஸ் அணியில் தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஸ்மந்த சமீர இணைக்கப்பட்டிருந்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணிசார்பாக கடந்த போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால், ஆரம்பத்தில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். ஆனாலும், தனியாளாக ஓட்டங்களை குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோரி எவன்ஸ், லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் சதமடிக்க, கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
லோரி எவன்ஸ் ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், அன்ரே ரசல் 21 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில், 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிசார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், சொஹைப் மலிக் 29 ஓட்டங்களையும், டொம் மூர்ஸ் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்தவீச்சில், அன்ரே ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேவேளை, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள போதும், கடைசியாக விளையாடிய தங்களுடைய 3 போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியுள்ளது. இதேநேரம், இந்த வெற்றியுடன் கொழும்பு கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dinesh Chandimal | c Thisara Perera b Suranga Lakmal | 11 | 13 | 2 | 0 | 84.62 |
Laurie Evans | not out | 108 | 65 | 9 | 5 | 166.15 |
Daniel Bell Drummond | run out (Wanindu Hasaranga) | 12 | 15 | 1 | 0 | 80.00 |
Angelo Mathews | c Suranga Lakmal b Wanindu Hasaranga | 15 | 14 | 0 | 1 | 107.14 |
Andre Russell | run out (Suranga Lakmal) | 21 | 14 | 2 | 1 | 150.00 |
Extras | 6 (b 0 , lb 2 , nb 1, w 3, pen 0) |
Total | 173/4 (20 Overs, RR: 8.65) |
Did not bat | Thikshila de silva, Ashan Priyanjan, Isuru Udana, Qais Ahmed, Tharindu Kaushal, Dushmantha Chameera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 2 | 0 | 33 | 0 | 16.50 | |
Suranga Lakmal | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Mahesh Theekshana | 3 | 0 | 17 | 0 | 5.67 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Thisara Perera | 1 | 0 | 10 | 0 | 10.00 | |
Chathuranga de Sliva | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
Duanne Olivier | 3 | 0 | 33 | 0 | 11.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tom Moores | c Andre Russell b Qais Ahmed | 23 | 21 | 3 | 1 | 109.52 |
Johnson Charles | b Dushmantha Chameera | 8 | 8 | 1 | 0 | 100.00 |
Charith Asalanka | c Thikshila de silva b Andre Russell | 32 | 27 | 4 | 0 | 118.52 |
Shoaib Malik | c Daniel Bell Drummond b Andre Russell | 29 | 28 | 2 | 0 | 103.57 |
Chathuranga de Sliva | c & b Isuru Udana | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Thisara Perera | c Tharindu Kaushal b Andre Russell | 22 | 9 | 2 | 2 | 244.44 |
Wanindu Hasaranga | not out | 23 | 14 | 1 | 2 | 164.29 |
Suranga Lakmal | not out | 17 | 11 | 3 | 0 | 154.55 |
Extras | 9 (b 2 , lb 5 , nb 1, w 1, pen 0) |
Total | 167/6 (20 Overs, RR: 8.35) |
Did not bat | Binura Fernando, Mahesh Theekshana, Duanne Olivier, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Isuru Udana | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
Dushmantha Chameera | 3 | 0 | 26 | 1 | 8.67 | |
Ashan Priyanjan | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Qais Ahmed | 3 | 0 | 15 | 1 | 5.00 | |
Tharindu Kaushal | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Andre Russell | 4 | 0 | 46 | 3 | 11.50 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<