Home Tamil LPL தொடரில் தமது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த கொழும்பு கிங்ஸ்

LPL தொடரில் தமது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த கொழும்பு கிங்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

288
Photo Courtesy : SLC

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 13ஆவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி கண்டி டஸ்கர்ஸ் வீரர்களுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும், இந்த வெற்றியுடன் கொழும்பு கிங்ஸ் அணி மொத்தமாக நான்கு வெற்றிகளைப் பெற்று LPL தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கான தமது வாய்ப்பினையும் உறுதி செய்திருக்கின்றது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

ஹம்பாந்தோட்டை நகரில் சனிக்கிழமை (5) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார். இப்போட்டிக்கான கண்டி டஸ்கர்ஸ் அணி தமது வீரர்கள் குழாத்தில் இர்பான் பதான் மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரினை மீண்டும் அழைத்திருக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற அதே குழாத்தினை களமிறக்கியிருந்தது.

கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (C&WK), ப்ரென்டன் டெய்லர், குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், இர்பான் பதான், விஷ்வ பெர்னாந்து, லசித் எம்புல்தெனிய, நுவன் பிரதீப், முனாப் பட்டேல்

கொழும்பு கிங்ஸ் – லோரி எவன்ஸ், தினேஷ் சந்திமால் (WK), அஷான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (C), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹ்மட், துஷ்மந்த சமீர, டேனியல் பெல்-ட்ரம்மன்ட், தரிந்து கௌஷால் 

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைக்கத் தவறியது. அதன்படி, டஸ்கர்ஸ் அணியின் ஆரம்ப வீரரான அணித்தலைவர் குசல் பெரேரா 04 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து ஆட்டமிழக்க முன்வரிசை துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிசும் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

இதன் பின்னர், கண்டி டஸ்கர்ஸ் அணியினது மத்திய வரிசை துடுப்பாட்டமும் சொதப்பலாக அமைந்தது. கண்டி டஸ்கர்ஸ் அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களான ப்ரென்டன் டெய்லர், அசேல குணரத்ன, இர்பான் பதான் போன்ற வீரர்களும் எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்கத் தவறினர்.

இதனால், 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த கண்டி டஸ்கர்ஸ் அணி 105 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துக் கொண்டது. கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் வியாஸ்காந்த்

அதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் கைஸ் அஹ்மட், தரிந்து கௌஷால் மற்றும் திக்ஷில டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது திறமையினை வெளிப்படுத்தினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 106 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி சிறு தடுமாற்றம் ஒன்றை காட்டியது. எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த கொழும்பு கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களுடன் அடைந்தது.

விறுவிறுப்பான போட்டியில் வெற்றியை தக்வைத்த தம்புள்ள வைகிங்!

கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

மறுமுனையில் கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் முனாப் பட்டேல், விஷ்வ பெர்னாந்து மற்றும் நுவான் ப்ரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவிற்கு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் கண்டி டஸ்கர்ஸ் அணி LPL தொடரில் ஐந்தாவது தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணி தமது அடுத்த மோதலில் கோல் கிளேடியேட்டர்ஸ் வீரர்களை எதிர்வரும் திங்கட்கிழமை (7) எதிர்கொள்ள  கண்டி டஸ்கர்ஸ் தமது அடுத்த மோதலில் எதிர்வரும் புதன்கிழமை (9) ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Kandy Falcons
105/10 (19.2)

Colombo Stars
108/3 (14.1)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Isuru Udana b Andre Russell 34 21 4 2 161.90
Kusal Janith c Dinesh Chandimal b Dushmantha Chameera 4 3 1 0 133.33
Kusal Mendis run out () 5 4 1 0 125.00
Brendon Taylor lbw b Angelo Mathews 3 7 0 0 42.86
Asela Gunarathne lbw b Qais Ahmed 8 9 1 0 88.89
Irfan Pathan c Dushmantha Chameera b Ashan Priyanjan 18 27 2 0 66.67
Dilruwan Perera lbw b Qais Ahmed 12 18 2 0 66.67
Lasith Embuldeniya c Laurie Evans b Ashan Priyanjan 4 10 0 0 40.00
Vishwa Fernando c Angelo Mathews b Thikshila de silva 7 7 1 0 100.00
Nuwan Pradeep b Thikshila de silva 2 8 0 0 25.00
Munaf Patel not out 0 1 0 0 0.00


Extras 8 (b 0 , lb 5 , nb 0, w 3, pen 0)
Total 105/10 (19.2 Overs, RR: 5.43)
Fall of Wickets 1-22 (2.3) Kusal Janith, 2-34 (3.5) Kusal Mendis, 3-48 (5.2) Rahmanullah Gurbaz, 4-55 (6.2) Brendon Taylor, 5-65 (9.1) Asela Gunarathne, 6-85 (13.4) Dilruwan Perera, 7-95 (16.2) Irfan Pathan, 8-98 (16.6) Lasith Embuldeniya, 9-104 (17.6) Vishwa Fernando, 10-105 (19.2) Nuwan Pradeep,

Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 14 1 7.00
Isuru Udana 3 0 21 0 7.00
Dushmantha Chameera 4 0 17 1 4.25
Andre Russell 2 0 18 1 9.00
Qais Ahmed 4 0 8 2 2.00
Tharindu Kaushal 2 0 12 0 6.00
Ashan Priyanjan 1 0 4 2 4.00
Thikshila de silva 1.2 0 6 2 5.00


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal b 35 39 7 0 89.74
Laurie Evans c Kusal Janith b Munaf Patel 5 7 1 0 71.43
Daniel Bell Drummond c Kusal Janith b Nishan Madushka Fernando 11 10 1 1 110.00
Angelo Mathews lbw b Nuwan Pradeep 2 3 0 0 66.67
Ashan Priyanjan b 26 27 5 0 96.30


Extras 29 (b 4 , lb 8 , nb 1, w 16, pen 0)
Total 108/3 (14.1 Overs, RR: 7.62)
Fall of Wickets 1-22 (2.2) Laurie Evans, 2-41 (5.1) Daniel Bell Drummond, 3-52 (6.4) Angelo Mathews,

Bowling O M R W Econ
Munaf Patel 4 0 28 1 7.00
Vishwa Fernando 4 0 29 1 7.25
Nuwan Pradeep 2.1 0 10 1 4.76
Lasith Embuldeniya 3 0 24 0 8.00
Irfan Pathan 1 0 5 0 5.00



முடிவு – கொழும்பு கிங்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<