விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான 25 வயது நிரம்பிய சதீர சமரவிக்ரம, லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான தம்புள்ள வைகிங் அணியில் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உபாதைக்குள்ளாகியுள்ள ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்
லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் அணியின் முதல் போட்டியில், துடுப்பாட்ட வீரரான ஓசத பெர்ணான்டோ உபாதையினை எதிர்கொண்டிருந்தார். ஒசதவின் உபாதையினை கருத்திற்கொண்டு பிரதியீட்டு வீரர்களில் ஒருவராகவே தம்புள்ளை அணியில் சதீர சமரவிக்ரம இணைகின்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் இடம்பெற்ற சதீர சமரவிக்ரம, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக அறிமுகம் பெற்ற போதிலும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து எந்தவித சர்வதேச போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், தற்போது தம்புள்ள வைகிங் அணியில் இணைந்திருக்கும் சதீர சமரவிக்ரம சுயதனிமைப்படுத்தலில் உள்ளார். சுயதனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் அவருக்கு தம்புள்ளை வைகிங் அணி விளையாடுகின்ற 5 குழுநிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மறுமுனையில் உபாதைக்கு ஆளாகிய ஓசத பெர்ணான்டோ, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இருந்து வெளியேறாவிட்டாலும் அவரினால் ஒரு வாரத்திற்கு போட்டிகள் எதிலும் பங்கேற்ற முடியாது என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
Video – சிறந்த துவக்கத்துடன் LPL 2020 தொடர் | Cricket Galatta LPL Special
அதேநேரம், தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ள வைகிங் அணியினர் தமது அடுத்த லங்கா ப்ரீமியர் லீக் தொடர் மோதலில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை இன்று (30) எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<