Home Tamil சுப்பர் ஓவர் மூலம் LPL தொடரின் முதல் வெற்றியை பெற்ற கொழும்பு கிங்ஸ்

சுப்பர் ஓவர் மூலம் LPL தொடரின் முதல் வெற்றியை பெற்ற கொழும்பு கிங்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

419
SLC

இலங்கையில் முதன்முறையாக நடைபெறும் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் இன்று முடிவுக்கு வந்த ஆரம்ப போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டு அணிகளும் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தலா 219 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சுப்பர் ஓவரின் மூலம் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.

>> லங்கா ப்ரீமியர் லீக்கை ஆளுமா கொழும்பு கிங்ஸ்?

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.  கொழும்பு கிங்ஸ் அணி  அன்ரே ரசல், கைஸ் அஹமட், லோரி எவன்ஸ் மற்றும் மன்ப்ரீட் கோனி ஆகியோரை வெளிநாட்டு வீரர்களாக இணைத்திருந்ததுடன், கண்டி டஸ்கர்ஸ் அணி ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், இர்பான் பதான் மற்றும் நவீன் ஹூல்-ஹக் ஆகியோரை வெளிநாட்டு வீரர்களாக இணைத்திருந்தது.

கொழும்பு கிங்ஸ் –  லோரி எவன்ஸ், தினேஸ் சந்திமால், அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹமட், துஷ்மந்த சமீர, மன்ப்ரீட் கோனி, அமில அபோன்சோ

கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, இர்பான் பதான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ், நவீன் ஹுல்-ஹக், லசித் எம்புல்தெனிய, நுவான் பிரதீப், கவிஷ்க அஞ்சுல

கொழும்பு கிங்ஸ் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டதுடன், துடுப்பாட்டத்தை மிகச்சிறப்பாக நிறைவுசெய்து 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடி T20 ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. டஸ்கர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் வேகமாக ஓட்டங்களை குவித்து, எல்.பி.எல். தொடரின் முதல் அரைச்சதத்தை பதிவுசெய்தார்.

இவர் எதிர்கொண்ட 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6  பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்று, கைஸ் அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும், டஸ்கர்ஸ் அணியின் தலைவர் குசல் பெரேரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், வேகமாகவும் ஓட்டங்களை குவித்தார்.

கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக இறுதி ஓவர் வரை ஓட்டங்களை குவித்த குசல் பெரேரா 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை குவித்த போதும், துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டார். இவருக்கு அடுத்தப்படியாக அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், மன்ப்ரீட் கோனி, துஷ்மந்த சமீர மற்றும் கைஸ் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. லோரி எவன்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் தன்னுடைய இரண்டாவது ஓவரை வீசிய இர்பான் பதான் தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

கண்டி டஸ்கர்ஸ் அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ள, கொழும்பு கிங்ஸ் அணி அபாரமாக ஆடியது. லோரி எவன்ஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், தினேஸ் சந்திமால் அரைச்சதம் கடந்தார். தினேஸ் சந்திமால் 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் திக்ஷில டி சில்வா (22) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால், கொழும்பு கிங்ஸ் அணி பின்னடைவை சந்தித்தது.

தொடர்ந்து அன்ரே ரசல் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு சவால் கொடுக்கும் வகையில் துடுப்பெடுத்தடிய போதும், போட்டியின் 17வது ஓவரை வீசிய நுவான் பிரதீப் அஷான் ப்ரியன்ஜன் மற்றும் அன்ரே ரசல் (24) ஆகியோரை வெளியேற்றி கண்டி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால், இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரராக பார்க்கப்படும் இசுரு உதான வெறும் 12 பந்துகளில் 34 ஓட்டங்களை விளாச போட்டி சமனிலையாகி, சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. போட்டியின் இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட இசுரு உதான 2 சிக்ஸர்களை விளாசியதுடன், அணி 19 ஓட்டங்களை பெற உதவினார். இறுதியில் கொழும்பு கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 16 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கண்டி டஸ்கர்ஸ் அணியால் 12 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதன்மூலம் தொடரின் முதல் வெற்றியை கொழும்பு கிங்ஸ் அணி பெற்றுக்கொண்டது. 

LPL தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் இன்று (27) கோல் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

Result


Colombo Stars
219/7 (20)

Kandy Falcons
219/3 (20)

Batsmen R B 4s 6s SR
Kusal Janith c Ashan Priyanjan b Dushmantha Chameera 87 52 9 4 167.31
Rahmanullah Gurbaz c Laurie Evans b Qais Ahmed 53 22 6 4 240.91
Kusal Mendis c Dinesh Chandimal b Manpreet Singh 30 24 2 2 125.00
Asela Gunarathne not out 33 20 5 0 165.00
Seekkuge Prasanna not out 4 2 1 0 200.00


Extras 12 (b 0 , lb 5 , nb 0, w 7, pen 0)
Total 219/3 (20 Overs, RR: 10.95)
Did not bat Nuwan Pradeep, Naveen ul Haq, Irfan Pathan, Kamindu Mendis, Lasith Embuldeniya, Kavishka Anjula,

Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 26 0 13.00
Manpreet Singh 4 0 42 1 10.50
Dushmantha Chameera 4 0 58 1 14.50
Isuru Udana 4 0 33 0 8.25
Qais Ahmed 3 0 28 1 9.33
Amila Aponso 1 0 10 0 10.00
Ashan Priyanjan 2 0 17 0 8.50


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal c Nuwan Pradeep b Naveen ul Haq 80 46 12 2 173.91
Laurie Evans c Priyamal Perera b Asela Gunarathne 22 14 1 2 157.14
Thikshila de silva c Rahmanullah Gurbaz b Naveen ul Haq 22 16 1 1 137.50
Andre Russell c Priyamal Perera b Nuwan Pradeep 24 13 3 1 184.62
Angelo Mathews b Seekkuge Prasanna 2 5 0 0 40.00
Ashan Priyanjan c Priyamal Perera b Nuwan Pradeep 8 7 1 0 114.29
Isuru Udana not out 34 12 0 4 283.33
Qais Ahmed run out (Kusal Mendis) 15 8 3 0 187.50
Manpreet Singh not out 0 0 0 0 0.00


Extras 12 (b 0 , lb 5 , nb 1, w 6, pen 0)
Total 219/7 (20 Overs, RR: 10.95)
Did not bat Dushmantha Chameera, Amila Aponso,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 4 0 34 2 8.50
Irfan Pathan 1.5 0 25 0 16.67
Naveen ul Haq 4 0 40 2 10.00
Kusal Mendis 0.1 0 0 0 0.00
Kavishka Anjula 4 0 48 0 12.00
Asela Gunarathne 4 0 49 1 12.25
Kamindu Mendis 1 0 12 0 12.00
Seekkuge Prasanna 1 0 6 1 6.00