லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிக் குழாம்கள் உறுதி

Lanka Premier League 2020 – Coverage powered by MyCola

4510

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடும், ஐந்து அணிகளினதும் இறுதி வீரர் குழாம்கள் இன்று (23) உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (26) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த தொடர் பற்றிய எதிர்பார்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன.

கண்டி அணியுடன் இணைந்த விஷ்வ மற்றும் கெவின்

LPL தொடர் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல், முன்னணி வீரர்களின் இடைவிலகல் போன்ற பல்வேறு சிரமங்களை தாண்டிய நிலையிலையே ஹம்பாந்தோட்டை மண்ணில் நடைபெறவிருக்கின்றது. 

இந்த தொடரில் ஆடும் அணிகள் கடந்த மாதம், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை கொள்வனவு செய்த போதும் அணிகளில் வெற்றிடங்களும் காணப்பட்டிருந்தன. அதன்படி, அணிகளுக்கு தங்களது வீரர் குழாம்களில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசத்திற்குள் அணிகளது வீரர் குழாம்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது இறுதி வீரர்கள் குழாத்தினை அறிவித்திருக்கின்றன.  

இதில் தம்புள்ள வைகிங் அணிக் குழாத்தினை நோக்கும் போது அவ்வணியில் மொத்தம் 21 வீரர்கள் காணப்படுகின்றனர். இலங்கையின் அதிரடி சகலதுறைவீரர் தசுன் ஷானக்கவின் தலைமையில் வழிநடாத்தப்பட எதிர்பார்க்கப்படும் தம்புள்ள வைகிங் அணி, இந்தியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சுதிப் தியாகியை தங்களது அண்மைய உள்ளடக்கமாக மாற்றியிருந்தது. 

இவர்கள் தவிர பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான அன்வர் அலி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சகலதுறைவீரர் சமியுல்லாஹ் சென்வாரி போன்ற வீரர்களும் தம்புள்ள வைகிங் அணிக்கு பலம் சேர்க்கும் நிலையில், இலங்கையின் நட்சத்திர வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்க போன்ற முன்னணி வீரர்களினையும் அவ்வணி கொண்டிருக்கின்றது. 

மறுமுனையில், இலங்கையின் வேக நட்சத்திரம் லசித் மாலிங்க இல்லாத நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி மூலம் இந்த ஆண்டின் அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியினர் வழிநடாத்தப்படுகின்றனர். 

டேல் ஸ்டெய்ன் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு ஆட சம்மதம்

கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் வீரர்கள் குழாத்தினை நோக்கும் போது அவ்வணி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரான சட்விக் வால்டன், அவர்களது தாய்க்கழகமான குயேட்டா கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அஹ்சான் அலி, அப்துல் நசிர் போன்றோரினை LPL தொடருக்காக அண்மையில் இணைத்திருக்கின்றது.  

மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் உபதலைவராக பானுக்க ராஜபக்ஷ செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவரான சஹிட் அப்ரிடி இன்னும் இலங்கை வந்து சேராத நிலையில் அவ்வணி பங்கேற்கும் ஓரிரு போட்டிகளில் தலைமைப் பொறுப்பு பானுக்க ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

பானுக்க ராஷபக்ஷ தவிர கோல் கிளேடியேட்டர்ஸ் அணி மொஹமட் ஆமீர், தனுஷ்க குணத்திலக்க மற்றும் ஹஷரத்துல்லா சஷாய் போன்ற முன்னணி வீரர்களை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

லியாம் ப்ளன்கட், வஹாப் ரியாஸ் போன்ற முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் விலகலை அடுத்து முனாப் பட்டேல், சொஹைல் தன்வீர் போன்றோரினை கண்டி டஸ்கர்ஸ் அணி உள்வாங்கியது. எனினும், இதில் சொஹைல் தன்வீருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவ்வணி தென்னாபிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெயினை தமது குழாத்திற்குள் சேர்த்துள்ளது. 

இதேநேரம், இவ்வணிக்காக வீரர்கள் ஏலத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட கிறிஸ் கெயிலும் உபாதை காரணமாக விலகியிருந்தார். கிறிஸ் கெயிலின் விலகலின் பின்னர் தற்போது ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டவீரர் ப்ரென்டன் டெய்லர் கண்டி டஸ்கர்கஸ் அணியில் இணைந்திருக்கின்றார்.  

குசல் ஜனித் பெரேரா தலைமையில் வழிநடாத்தப்படவிருக்கும் கண்டி டஸ்கர்ஸ் அணியில் குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, மாய சுழல்பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொட மற்றும் சீக்குகே பிரசன்ன போன்ற முன்னணி வீரர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர், உபதலைவர் அறிவிப்பு

கொழும்பு கிங்ஸ் அணியினை நோக்கும் போது அந்த அணியில் இருந்து பாப் டு ப்ளேசிஸ், மன்விந்தர் பிஸ்லா போன்ற முன்னணி வீரர்கள் விலகிய நிலையில் அவ்வணி லோரி எவான்ஸ், டேனியல் பெல் ட்ரம்மொன்ட் ஆகிய இரண்டு இங்கிலாந்து வீரர்களினையும் தமது குழாத்தில் இணைத்தது. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் இந்த LPL தொடரில் களம் காணவிருக்கும் கொழும்பு கிங்ஸ் அணி, அன்ட்ரூ ரசல், இசுரு உதான, தினேஷ் சந்திமால் போன்ற முன்னணி வீரர்களையும் தம்வசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இறுதியாக வடக்கு, கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இந்த LPL தொடரில் அதிக இளவயது வீரர்களை கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றது. ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டவீரர் ஜோன்சன் சார்ள்ஸ் தவிர பாகிஸ்தானின் சொஹைப் மலிக், உஸ்மான் ஷின்வாரி மற்றும் கைல் அப்போட் போன்ற முன்னணி வீரர்களும் இலங்கையின் இளம் நட்சத்திரங்களான அவிஷ்க பெர்னாந்து, வனிந்து ஹஸரங்க ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் வலைப் பந்துவீச்சாளராக அழைக்கப்பட்டிருந்த ”கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்” என அறியப்படும் செபஸ்டியன்பிள்ளே விஜயராஜூம் தற்போது வீரர்கள் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

அணிக் குழாம்கள்

தம்புள்ள வைகிங் 

தசுன் ஷானக்க, சமியுல்லா சென்வாரி, அன்வர் அலி, அப்தாப் ஆலம், சமிட் பட்டேல், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு குமார, ஓசத பெர்னாந்து, கசுன் ராஜித, போல் ஸ்ரிலிங், லஹிரு மதுசங்க, உபுல் தரங்க, அஞ்செலோ பெரேரா, ரமேஷ் மெண்டிஸ், புலின தரங்க, அஷேன் பண்டார, டில்சான் மதுசங்க, சசிந்து கொலம்பகே, கவிந்து நதீஷன், மலிந்த புஷ்பகுமார

கோல் கிளேடியேட்டர்ஸ் 

சஹிட் அப்ரிடி, சாட்விக் வால்டன், ஹஸ்ரத்துல்லா சஷாய், மொஹமட் ஆமீர், தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, அஹ்சன் அலி, அஷாம் கான், லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய, அசித்த பெர்னாந்து, நுவான் துஷார, அப்துல் நசிர், வக்காஸ் மக்ஷூத், மொஹமட் சிராஸ், தனன்ஞய லக்ஷான், ஷானக்க ருவன்சிரி, சஹான் ஆராச்சி, துவிந்து திலகரட்ன 

கண்டி டஸ்கர்ஸ் 

குசல் ஜனித் பெரேரா, ப்ரன்டன் டெய்லர், இர்பான் பதான், முனாப் பட்டேல், குசல் மெண்டிஸ், நுவன் பிரதீப், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன, நவீன் உல் ஹக், றஹ்மானுல்லா குர்பாஸ், கமிந்து மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, ப்ரியாமல் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, லசித் எம்புல்தெனிய, லஹிரு சமரக்கோன், நிஷான் மதுஷ்க, சாமிக்க எதிரிசிங்க, இஷான் ஜயரட்ன

கொழும்பு கிங்ஸ் 

அஞ்செலோ மெதிவ்ஸ், அன்ட்ரே ரசல், மன்பிரீட் சிங் கோனி, லோரி எவான்ஸ், டேனியல் பெல் ட்ரம்மன்ட், இசுரு உதான, தினேஷ் சந்திமால், அமில அபொன்சோ, அஷான் பிரியஞ்சன், ரவிந்தர்பல் சிங், கைஸ் அஹ்மட், ஜெப்ரி வன்டர்சேய், துஷ்மந்த சமீர, திக்ஷில டி சில்வா, தரிந்து கெளஷால், லஹிரு உதார, ஹிமேஷ் ராமநாயக்க, கலன பெரேரா, தரிந்து ரத்நாயக்க, நவோத் பரணவிதான, தம்மிக்க பிரசாத், கரீம் கான் சாதிக் 

ஜப்னா ஸ்டால்லியன்ஸ் 

திசர பெரேரா, ஜோன்சன் சார்ள்ஸ், வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக், உஸ்மான் சின்வாரி, அவிஷ்க பெர்னாந்து, தனன்ஞய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாந்து, டொம் மூர்ஸ், கைல் எப்போட், டுஆன்னே ஒலிவர், மினோத் பானுக்க, சத்துரங்க டி சில்வா, மஹேஷ் தீக்ஷன, சரித் அசலன்க, நுவனிது பெர்னாந்து, கனகரட்னம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஸ்காந்த், செபஸ்டியன்பிள்ளே விஜயராஜ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<