துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய திமுத், லஹிரு திரிமான்ன

788
Sri lanka cricket

தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரினை முன்னிட்டு இலங்கை அணி வீரர்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட உள்ளகப் பயிற்சிப் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட தொடரானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.   

>> பயிற்சிப் போட்டியில் சதமடித்து அசத்திய குசல் மெண்டிஸ்

இந்த நிலையில், தென்னாபிரிக்கா தொடருக்கான 22 பேர் கொண்ட வீரர்கள் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதுடள், 10 நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி முகாம் ஒன்று கடந்த 13ஆம் திகதி முதல் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதனிடையே, இலங்கை உள்ளக கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நேற்று (20) ஆரம்பமாகியது

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் தலைமையிலான பதினொருவர் அணி, தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 100 ஓட்டங்களையும், சந்தூஷ் குணதிலக்க (58), தினேஷ் சந்திமால் (57) ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்தும் வலுச்சேர்த்தனர்

பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த மற்றும் துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான இன்று (21) தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த திமுத் கருணாரத்ன தலைமையிலான பதினொருவர் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை எடுத்தது.

>> ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் மாற்றம்

துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன அரைச்சதம் கடந்து 78 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 62 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டமின்றி வெளியேற, தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 35 ஓட்டங்களையும் எடுத்தனர்

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இறுதியில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

தினேஷ் சந்திமால் பதினொருவர் அணி 318/10 (68.2) – குசல் மெண்டிஸ் 100, சந்தூஷ் குணதிலக்க 58, தினேஷ் சந்திமால் 57, டில்ருவான் பெரேரா 3, கசுன் ராஜித்த 2, துஷ்மன்த சமீர 2

திமுத் கருணாரத்ன பதினொருவர் அணி 231/5 (52) – திமுத் கருணாரத்ன 78, லஹிரு திரிமான்ன 62, தனஞ்சய டி சில்வா 43, தசுன் ஷானக்க 35, சுரங்க லக்மால் 2, லசித் எம்புல்தெனிய 1

முடிவுபோட்டி சமநிலையில் முடிவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<