ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் மாற்றம்

456

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) கொவிட்-19 வைரஸ் காரணமாக ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் முறைமையில் (Point System) மாற்றம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.  

LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி

அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. இன் கிரிக்கெட் குழு முன்வைத்த பரிந்துரை ஒன்றுக்கு அமையவே, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புள்ளிமுறை மூலம், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அணிகள் சதவீத அடிப்படையில் வரிசைப்படுத்தப்படவிருக்கின்றன. இவ்வாறு சதவீத முறைப்படி வரிசைப்படுத்தும் அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறுகின்ற அணிகளே இனி 2021ஆம் ஆண்டின் ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொள்ளும்.  

தற்போது கொவிட்-19 வைரஸ் காரணமாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அரைவாசி போட்டிகள் கூட நிறைவுக்கு வரவில்லை. ஆனால், ஏற்கனவே போட்ட திட்டத்திற்கு அமைய இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அனைத்துப் போட்டிகளும் 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் முடிவடைய வேண்டும்.  

எனினும், எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதிக்குள் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 85 சதவீத போட்டிகளே நிறைவுக்கு வர சாத்தியம் இருப்பதனால் சதவீத அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.   

இதேநேரம், புதிய புள்ளிமுறைமையின் அடிப்படையில் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகள் பட்டியலில் 4 தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, சதவீத அடிப்படையில் பார்க்கும்போது, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதேநேரம், 3 தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வி என 296 புள்ளிகளுடன் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி சதவீத அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கின்றது. இந்த ஏற்ற இறக்கங்களுக்கு, அவுஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 82.2 ஆகவும், இந்திய அணியின் வெற்றி சதவீதம் 75 ஆக இருப்பதுமே காரணமாகும்.

 LPL தொடருக்கு ஜோராக  தயாராகும் அணிகளும், வீரர்களும் 

இலங்கை கிரிக்கெட் அணியினர் சதவீத புள்ளிகள் அட்டவணையில் 2 தொடர்களில் ஆடி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று 80 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் காணப்படுகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச்சதவீதம் 33.3 ஆக காணப்படுகின்றது.   

இலங்கை டெஸ்ட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான அடுத்த தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

தற்போதைய புதிய முறையின்படி, அணிகளின் சரநிலை 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<