இலங்கை மக்களிடையே வேகமாகப் பரவி வருகின்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தவும், நாட்டில் சிறந்ததொரு விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலும் நாடளாவிய ரீதியில் உடற்பயிற்சி கழகங்களை உருவாக்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆறு மாதங்களில் புதிய விளையாட்டு சட்டம் – நாமல் ராஜபக்ஷ
இதன் முதல்கட்டமாக மேல் மாகாணத்தில் நடைபாதை உடற்பயிற்சியகங்களுடன் தொடர்புடைய உடற்பயிற்சி ஆலோசகர்களுடனான சந்திப்பொன்று நேற்று (17) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர், ”இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைபாதைகளுடன் சேர்த்து இம்முறை வரவுசெலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 1000க்கும் அதிகமான நடைபாதைகளை நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், இதுதொடர்பில் தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்களை அல்லது உடற்பயிற்சி ஆலோசர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மேற்பார்வையிடுவதற்கும் ஒரு அமைப்பு இல்லாததுதான் எங்களுக்கு உள்ள மிகப்பெரிய சவால். உதாரணத்துக்கு நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுகளுக்கும் தாய் சங்கங்கள் காணப்படுவதுடன், தேசிய ரீதியில் அது மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது.
Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140
அதேபோல, ஒவ்வொரு விளையாட்டுக்குமான பயிற்சியாளர்களும் தேசிய அல்லது சர்வதேச ரீதியில் பயிற்சியாளராக தகுதி பெறுகின்றனர். ஆனால், பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் எத்தனை உடற்பயிற்சி மையங்கள் உள்ளன? அதன் பயிற்சியாளர்கள் எவ்வாறு தகுதி பெறுவது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
இதுகுறித்த தகவல்களை அடுத்த ஆண்டு முதல் உரிய திட்டமொன்றின் ஊடாக முறையாக தரவுகளை சேகரிப்போம் என்று நம்புகிறோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
”நாங்கள் அடிக்கடி கொழும்பில் உள்ள டொரிண்டன் மைதானத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு நிறைய பயிற்சியாளர்கள் உடற்பயிற்சிகளையும், மன நல்வாழ்வுக்கான வழிகாட்டல்களையும் வழங்குவதை அவதானித்து வருகின்றோம்.
எமது வீரர்களுக்கு ஒரு சிறந்த சேவையை வழங்கி வருகின்ற உங்களைப் போன்ற பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு அமைச்சகம் என்ன செய்ய வேண்டும்? இதை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த வழி என்ன? நிலைமையை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்? உங்கள் சேவையை மேலும் மேம்படுத்த அரசாங்கத்தின் ஊடாக என்ன செய்ய வேண்டும்? என்பதை விவாதிக்க ஒரு தொடக்கப் புள்ளியாக நாங்கள் இன்று இந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அங்கு வந்த பயிற்சியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இராணுவ தளபதி
அத்துடன். அவர்களின் தொழில்முறை மற்றும் அறிவு மட்டத்தை பரீட்சிக்க ஒரு மதிப்பீட்டு திட்டத்தை உருவாக்குவது, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், ஒரு பயிற்சியாளருக்கு ஒரு விளையாட்டு வீரரை நியமித்தல் மற்றும் அந்த விளையாட்டு வீரரின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மாறுதல் மற்றும் தேவையான நடைபாதைகளை நவீனப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, தேசிய உடற்தகுதி வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும், உடற்தகுதி மதிப்பைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்கவும், பயிற்சியாளர்களை சரியான முறையில் பயிற்றுவிக்கவும், அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கவும், உடற்பயிற்சி நிலையத்தில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேட யோசனை ஒன்று முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் ஜயசூரிய, விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ.ஜி விஜேரத்ன, விளையாட்டு வைத்திய நிறுவனத்தின் பணிப்பாளர் லால் ஏக்கநாயக்க மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<