மே.தீவுகள் தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட், T20I குழாம் அறிவிப்பு

400

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20i கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் சபை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள T20i  மற்றும் டெஸ்ட் குழாம்களை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கொழும்பு, தம்புள்ளை அணிகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்!

இரண்டு அணிகளுக்கும் இடையிலான சுற்றுப்பயணம் T20i  தொடருடன் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், உபாதை காரணமாக கொலின் டி கிரெண்டோம் மற்றும் அஜாஷ் பட்டேல் ஆகியோரும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

T20i  குழாத்தில் அறிமுக வீரராக துடுப்பாட்ட வீரர் டெவோன் கொன்வே இணைக்கப்பட்டுள்ளதுடன், கெயல் ஜெமிஸன் முதன்முறையாக T20i குழாத்தில் இணைக்கப்பட்டார். அத்துடன் நியூசிலாந்து குழாத்தின் வழமையான வீரர்களான டிம் சௌதி (தலைவர்), மார்டின் கப்டில், லொக்கி பேர்கஸன், ரொஸ் டெய்லர் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள டிம் சௌதி, கெயல் ஜெமிஸன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் முதலிரண்டு T20i போட்டிகளில் மாத்திரமே விளையாடுவர் என்பதுடன், டெஸ்ட் குழாத்துடன் இணையவுள்ளமையால் மூன்றாவது T20i போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து T20I குழாம்

டிம் சௌதி (தலைவர்), ஹெமிஸ் பென்னெட், டெவோன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், கெயல் ஜெமிஸன், டார்லி மிச்செல், ஜிம்மி நீஷம், மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி, க்ளென் பிலிப்ஸ், டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர்

இதேவேளை, T20i  தொடருக்கு பின்னர் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாத்தில், கேன் வில்லியம்சன் இணைக்கப்பட்டுள்ளதுடன், ட்ரென்ட் போல்ட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாத்திரமின்றி உபாதை காரணமாக T20i  குழாத்தில் இடம்பெறாத அஜாஷ் பட்டேல் மற்றும் கொலின் கிரெண்டோம் ஆகியோரும் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

மேலும் டொம் லேத்தம், நெயில் வெங்கர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங் மற்றும் டொம் ப்ளெண்டல் ஆகியோரும் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20i தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்து டெஸ்ட் குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொம் ப்ளென்டல், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிரெண்டோம், கெயல் ஜெமிஸன், டொம் லேத்தம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஷ் பட்டேல், டிம் சௌதி, ரொஸ் டெய்லர், நெயில் வெங்கர், பிஜே வெட்லிங், வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<