கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய – பாகிஸ்தான் வேகப்பந்து ஜோடி

652
Sohail Tanveer and Munaf Patel

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ், தமது குழாத்தில் பிரதியீட்டு வீரர்களாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் முனாப் பட்டேல் மற்றும் பாகிஸ்தான் அணியின் சொஹைல் தன்வீர் ஆகியோரினை இணைத்திருக்கின்றது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நெருங்கிவரும் நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளும் தமது குழாம்களில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. 

>> LPL தொடரில் புதிதாக இணையும் இங்கிலாந்து, பாக் வீரர்கள்!

அதன்படி, கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடவிருந்த வஹாப் ரியாஸ், லியாம் ப்ளன்கட் ஆகியோர் விலகிய நிலையில் முனாப் பட்டேல் மற்றும் சொஹைல் தன்வீர் ஆகியோரின் பிரதியீடு இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த வீரர்களில் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் காரணமாக விலகியிருக்க, லியாம் ப்ளன்கட் தசை உபாதை ஒன்றினால் விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மறுமுனையில் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்திருக்கும் வீரர்களில் ஒருவரான முனாப் பட்டேல், கண்டி டஸ்கர்ஸ் அணியில் உள்வாங்கப்டும் இரண்டாவது இந்திய வீரராக மாறியிருக்கின்றார். முன்னர், கண்டி டஸ்கர்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான இர்பான் பதானை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்த முனாப் பட்டேல் 97 T20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

>> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணையும் இங்கிலாந்து, தென்னாபிரிக்க வீரர்கள்!

இதேநேரம், சர்வதேச T20 லீக்குகளில் அசத்தி வருகின்ற பாகிஸ்தான் அணியின் சொஹைல் தன்வீர் 351 T20 போட்டிகளில் ஆடி, மொத்தமாக 364 விக்கெட்டுக்களை கைப்பற்றி மிகப் பெரிய அனுபவத்தினை கொண்டிருக்கின்றார். 

இந்த வீரர்கள் தவிர, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளான காலி கிளேடியட்டர்ஸ் மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர் சட்விக் வோல்டனையும், தம்புள்ளை வைகிங் இந்திய பந்துவீச்சாளர் சுதிப் தியாகியைினையும் தங்களது குழாம்களில் இணைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<