லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு

409

லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின், உத்தியோகபூர்வ இலச்சினை இன்று (17) இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. 

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார் உமர் குல்

அதன்படி இலங்கையின் தேசியக் கொடியில் துணிவுக்கு சான்றாக இருக்கும் சிங்க உருவத்தினை எண்ணக்கருவாக கொண்டு லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வடிவமைப்பக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

இதேநேரம், இந்த இலச்சினை நாட்டின் பராம்பரியம், நாட்டு மக்களின் மனநிலை, இலங்கை வீரர்கள் மைதானத்தில் காட்டும் தைரியம் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இன்னும், இலச்சினையில் காணப்படும் சிவப்பு நிறம் கண்டியன் ஓவியங்களையும், சிகிரிய ஓவியங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதோடு நீல, மஞ்சள் வர்ணங்கள் இலங்கையின் கிரிக்கெட்டினைக் குறிப்பிட்டுக் காட்டுவதாக அமைகின்றது. 

அதேநேரம், இலச்சினையில் உள்ள சிங்கத்தின் பிடரி மயிரில் காணப்படும் ஐந்து வர்ணங்களும் லங்கா ப்ரீமியர் தொடரில் விளையாடும் ஐந்து அணிகளையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. 

மேலும், இந்த வர்ணங்களை உபயோகித்திருப்பது இலங்கைக்கே தனித்துவமாக இருக்கும் ஒரு கிரிக்கெட் தொடரினை உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்களுக்கு வழங்குவதற்கு என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ இலச்சினை பற்றி கருத்து வெளியிட்ட, தொடரின் உரிமையாளர்களான IPG நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் குறித்த இலச்சினை இலங்கைக்கு தனித்துவமாக இருக்கும் விடயங்களை பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார். 

மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதி தலைவராக இருக்கும் ரவீன் விக்ரமரட்ன, இந்த இலச்சினை உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்களை தொடருடன் இலகுவான முறையில் இணைப்பதற்கு உதவியாக இருக்கும் எனக் கூறியிருந்தார். 

Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இரண்டு இடங்களிலும் நடைபெறவிருப்தோடு, தொடரின் வீரர்கள் ஏலம் 75 வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்போடு எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<