புவ்னேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகல்

257

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவ்னேஸ்வர் குமார், டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகிய இருவரும் காயம் காரணமாக நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக நேற்று (05) அறிவிக்கப்பட்டது. 

13ஆவது .பி.எல் தொடர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரில் சமரி, சசிகலா பங்கேற்பு

கடந்த தொடர்களில் கடுமையாக சொதப்பிய டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் இந்த தொடரில் அதிரடியான விளையாடி வரும் நிலையில், டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்து வருகிறது. 

இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து, தோல்வியால் துவண்டு போயுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அந்த அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான புவ்னேஸ்வர் குமார் காயம் காரணமாக நடப்பு .பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்

.பி.எல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வந்த புவ்னேஸ்வர் குமார், கடந்த 2ஆம் திகதி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசத் தொடங்கியபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக புவ்னேஸ்வர் குமாரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின் பேரில் புவ்னேஸ்வர் குமார் நடப்பு .பி.எல் தொடரில் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Video-Dhoni இன் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? | Cricket Galatta Epi 39

புவ்னேஸ்வர் குமார் குறித்து பிசிசிஐ இன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தொடைப் பகுதி தசையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக .பி.எல் போட்டியிலிருந்து புவ்னேஸ்வர் குமார் விலகுகிறார்

அவர் 6 முதல் 8 வாரங்களுக்கு சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது”  என தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து தற்போது புவ்னேஸ்வர் குமாரும் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும் என தெரிகிறது

ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி

இந்த நிலையில், பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ள வீரர் என்பதால், புவ்னேஸ்வர் குமாரின் சிகிச்சை செலவுகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்கிறது. 

இதேவேளை, டெல்லி கெபிடல்ஸ் அணியின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா காயம் காரணமாக .பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒக்டோபர் 3ஆம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய மிஸ்ரா காயமுற்றார். அவர் வீசிய முதல் பந்திலேயே நிதீஷ் ராணா கொடுத்த பிடியெடுப்பை எடுக்கும் முயற்சியில் அமித் மிஸ்ராவின் வலது மோதிர விரலில் பலத்த அடிபட்டது

எனவே, அமித் மிஸ்ராவின் பந்துவீசும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கோலி, ரெய்னாவின் சாதனைப்பட்டியலில் இணைந்த ரோஹித் சர்மா!

ஏற்கெனவே டெல்லி அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்குக் காயம் ஏற்பட்டு கடந்த போட்டியில்தான் மீண்டும் விளையாட வந்தார். இப்போது அமித் மிஸ்ராவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணியின் பந்துவீச்சு பலவீனமானதாகக் கருதப்படுகிறது

37 வயதாகும் அமித் மிஸ்ரா இத்தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 3 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அக்ஸர் படேல் களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<