இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கழகங்களுக்கு இடையிலான 23 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது கட்டப் போட்டிகள் இன்று (27) நிறைவுக்கு வந்தது.
இதில் காலி கிரிக்கெட் கழகம், நுகெகொட விளையாட்டுக் கழகம், செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மற்றும் BRC கழகங்கள் வெற்றியீட்டின.
கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய அம்ஷி
பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தரூஷ சமரவிக்ரமவின் அரைச்சதத்தின் (79) உதவியுடன் 120 ஓட்டங்களால் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் அபார வெற்றயீட்டியது.
இம்முறை போட்டித் தொடரில் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.
இன்று இடம்பெற்ற போட்டிகளில் குழு D இற்கான மோதல் ஒன்றில் காலி கிரிக்கெட் கழகம், குருநாகல் இளையோர் ககிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 32 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த தொடரில் தமது முதலாவது வெற்றியினைப் பதிவு செய்தது.
காலி கிரிக்கெட் கழகத்துக்காக பவன் சந்தேஷ் (72) கல்ப சேத்திய (62) அரைச்சதம் அடித்து வலுச்சேர்த்தனர்.
அதே குழு D இற்காக ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழகத்தை 121 ஓட்டங்களுக்கு சுருட்டிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
போட்டிகளின் சுருக்கம்
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
(மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானம்)
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 229/9 (50) – தரூஷ சமரவிக்ரம 79, சச்சின் பெர்னாண்டோ 41, தரூஷ பெர்னாண்டோ 23, ரயன் பெர்னாண்டோ 21, ருச்சிர கோசித 3/29, அவிந்து தீக்ஷன 2/32
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 102 (32.4) – மிதிர தேனுர 50, தரூஷ பெர்னாண்டோ 3/26, நதித் மிஷேந்திர 2/19, ப்ரவீன் குரே 2/25
முடிவு – செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் 120 ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கன்னி டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டது
காலி கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
(காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்)
காலி கிரிக்கெட் கழகம் – 260/9 (50) – பவன் சந்தேஷ் 72, கல்ப சேத்திய 62, வினுர துல்சர 43, கவிந்து எதிரிவீர 22, ருவின் பீரிஸ் 2/25, அசித வன்னிநாயக்க 2/43, சகிந்து விஜேரத்ன 2/51
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 228 (47.4) – டில்ஷான் கொல்லுரெ 53, தரிந்த விஜேசிங்க 42, கேஷான் வன்னியாரச்சி 38, ரவிஷ்க விஜேசிரி 3/45, வினுர துல்சர 2/27
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 32 ஓட்டங்களால் வெற்றி
ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
(ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழக மைதானம்)
ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழகம் – 121 (47.1) – ரஷான் திஸநாயக்க 28, நதுன் ஹெட்டியாரச்சி 20, சச்சிந்து கொலம்பகே 4/21, ரவீன் டி சில்வா 3/15, ரவிந்து பெர்னாண்டோ 2/20
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 123/5 (23.4) – நவோத் பரணவிதான 29, ரவிந்து பெர்னாண்டோ 29*, ரவீன் டி சில்வா 26*, அரவிந்த் ராஜேந்திரன் 2/21
முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
நுகெகொட விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
(பொலிஸ் விளையாட்டு கழக மைதானம்)
நுகெகொட விளையாட்டுக் கழகம் – 217/9 (43) – அமித தாபரே 52, சனுக்க லியனகே 37, நிபுன் லக்ஷான் 26, பசிந்து ஆதித்ய 22, ராகுல் குணசேகர 22, மொஹமட் பாஹிம் 3/37, தாஷிக் பெரேரா 2/26
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 163 (38) – ரெசந்து திலகரத்ன 30, அசேல் சிகார 28, ருவிந்து டில்ஷான் 24, சாருக்க ஜயதிலக்க 24, நிபுன் லக்ஷான் 4/57, முசித லக்ஷான் 3/24, விமுக்தி குலதுங்க 2/29
முடிவு – நுகேகொட விளையாட்டுக் கழகம் 54 ஓட்டங்களால் வெற்றி
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் BRC கழகம்
(BRC கழக மைதானம்)
கடற்படை விளையாட்டுக் கழகம் – 172 (45.2) – கஜித கொடுவேகொட 50, ரவிந்து மதுஷங்க 44, சமித ரங்க 20, தசுன் செனவிரத்ன 2/22, மலிந்த அபிஷேக் 2/32
BRC கழகம் – 173/7 (25) – நிசல் பெர்னாண்டோ 41, லஹிரு அத்தனாயக்க 36*, ஹிரான் ஜயசிங்க 23, சமித ரங்க 2/38, ரவிந்து மதுஷங்க 2/31
முடிவு – BRC கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<